tech news
மூனா மடிச்சு வச்சுக்கலாம்.. பங்கம் செய்யும் புது போன் – எந்த மாடல்?
ஹூவாய் நிறுவனத்தின் புதிய வகை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மீண்டும் லீக் ஆகியுள்ளது. ஹூவாய் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் மூன்றாக மடித்து வைத்துக் கொள்ளும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனம் மூன்றாக மடித்து வைக்கும் ஸ்மார்ட்போன் உருவாக்கி இருப்பது குறித்து ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகின.
மேலும், இதே போன்ற புகைப்படமும் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்த முறை வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் ஏராளமான டிசைன் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி உலக சந்தையில், மூன்று வகையில் மடித்து வைக்கும் முதல் ஸ்மார்ட்போன் மாடலாக இது இருக்கும் என்று தெரிகிறது.
வித்தியாச டிசைன் கொண்டிருப்பதோடு, இதன் விலை தற்போதைய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை விட அதிகமாகவே இருக்கும். சீன செய்தி நிறுவனமான சிஎன்பீட்டா வெளியிட்டுள்ள தகவல்களுடன் ஹூவாய் நிறுவனத்தின் மூன்று வகையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அந்நிறுவனத்தின் நுகர்வோர் வியாபார பிரிவு தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு பொது வெளியில் கையில் வைத்திருக்கும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
புகைப்படத்தின் படி இந்த ஸ்மார்ட்போன் வட்ட வடிவம் கொண்ட கேமரா மாட்யுல், ஸ்மார்ட்போனின் மத்தியில் இடம்பெற்று இருக்கிறது. இதன் பின்புற டிசைன், தற்போது விற்பனையில் உள்ள ஒன்பிளஸ் ஓபன் மற்றும் விவோ X போல்டு 3 ப்ரோ மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது.
மூன்று வகைகளில் மடித்து வைத்துக் கொள்ளும் ஹூவாய் ஸ்மார்ட்போனில் மூன்று ஸ்கிரீன்கள் இருக்கும். இதில் இரண்டு ஸ்கிரீன்களை உள்புறமாக மடிக்க முடியும். மற்றொரு ஸ்கிரீனை வெளிப்புறமாக மடிக்கலாம். இதில் 10 இன்ச் உள்புற டிஸ்ப்ளே, பசன்-ஹோல் கட்-அவுட், முன்புற கேமரா ஸ்மார்ட்போன் திரையின் இடதுபுற ஓரத்தில் இடம்பெற்று இருக்கும்.
ஸ்மார்ட்போனை மூன்றாக பிரிப்பதற்கு இரட்டை ஹிஞ்ச் சிஸ்டம் வழங்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் கிரின் 9 சீரிஸ் சிப்செட் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. தற்போதைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனின் விலை CNY 29,000 இந்திய மதிப்பில் ரூ. 3,35,000 வரை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.