tech news
பட்ஜெட் விலை.. 12GB ரேம்.. அசத்தும் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்
இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நோட் 40X 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், டைனமிக் போர்ட், மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம் மற்றும் 12GB வரை விர்ச்சுல் ரேம், 256GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் புது இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த XOS 14 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ சென்சார், 8MP செல்பி கேமரா, டூயல் LED பிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், DTS, டூயல் மைக்ரோபோன்களை கொண்டுள்ளது.
கனெக்டிவிட்டி 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
இன்பினிக்ஸ் நோட் 40X 5ஜி மாடல் லைம் கிரீன், பாம் புளூ மற்றும் ஸ்டார்லிட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு துவங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் எஸ்பிஐ மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் 6 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது.