tech news
இனி பட்ஜெட் விலையிலும் டேப்லெட் வாங்கலாம்.. அப்டேட் கொடுத்த Infinix
இந்தியாவில் குறைந்த விலையில், அதிரடி அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன்களை விற்கும் பிரபல பிராண்ட் இன்ஃபினிக்ஸ். ஸ்மார்ட்போன்களை மிட்-ரேஞ்ச் மற்றும் பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தி வருகிறது. ஸ்மார்ட்போனுடன் டேப்லெட் பிரிவிலும் களமிறங்க இன்ஃபினிக்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்ஃபினிக்ஸ் பிராண்ட்-இன் முதல் டேப்லெட் மாடல் இந்தியாவில் இன்ஃபினிக்ஸ் எக்ஸ்-பேட் (Infinix XPAD) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான பணிகளில் அந்நிறுவனம் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இந்நிறுவனம் தனது முதல் கேமிங் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்தது. இதுவரை தனது ஏராளமான சாதனங்களை இன்ஃபினிக்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வரிசையில், புதிய சாதனமும் இணையலாம்.
புதிய இன்ஃபினிக்ஸ் எக்ஸ் பேட் “X1101B” எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடலின் அம்சங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த மாடலில் மிட் ரேஞ்ச் மாடலுக்கு ஏற்ற வகையிலான வசதிகள் வழங்கப்படலாம். இன்ஃபினிக்ஸ் இதுவரை மிட் ரேஞ்ச் பிரிவில் சாதனங்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. புதிய டேப்லெட்-இல் சிம் கார்டு வசதி வழங்கப்படலாம்.
சிம் கார்டு வசதி கொண்டு பயனர்கள் மொபைல் டேட்டா பயன்படுத்தலாம். இந்த அம்சம் டேப்லெட் பயன்பாட்டை மேலும் அதிகப்படுத்தும். அடிக்கடி பயணம் மேற்கொள்வோருக்கு இது பயனுள்ள அம்சமாக இருக்கும். ஸ்மார்ட்போன் தவிர இதர துறைகளிலும் கவனம் செலுத்தவே இன்ஃபினிக்ஸ் டேப்லெட் பிரிவில் களமிறங்குவதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் பிரிவில் வெற்றி பெற்ற நிலையில், இதர பிரிவுகளிலும் இந்நிறுவனம் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது.
இதுதவிர இன்ஃபினிக்ஸ் தனது நோட் 40 ஸ்மார்ட்போனை ஜூன் 21 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 20,000-க்கும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், இந்த விலை பிரிவில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இந்த மாடல் இருக்கும்.