Connect with us

tech news

₹5599-க்கு புது Phone அறிமுகம்- என்ன ஸ்பெஷல்?

Published

on

ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் A50C மற்றும் A50 என இரண்டு புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஐடெல் A50C மற்றும் A50 மாடல்களில் 6.6 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே, 8MP பிரைமரி கேமரா, AI லென்ஸ், 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் அதிகபட்சம் 4GB ரேம், 64GB மெமரி, யுனிசாக் T603 பிராசஸர், 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஐடெல் A50C மாடலில் மட்டும் 2GB ரேம், 32GB மெமரி, 4000 mAh பேட்டரி, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இரு ஸ்மார்ட்போன்களிலும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் ஓஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் GPS உள்ளது.

புதிய ஐடெல் ஸ்மார்ட்போன்களுக்கு ஸ்கிரீனை இலவசமாக மாற்றிக் கொள்ளும் வசதி, ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது. ஐடெல் A50C மற்றும் A50 மாடல்கள் பிளாக், புளூ, கோல்டன் மற்றும் கிரீன் என நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.

விலையை பொருத்தவரை ஐடெல் A50C ஸ்மார்ட்போனின் விலை ரூ. 5,599 என்றும் ஐடெல் A50 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 6,599 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களின் விற்பனை அமேசான் வலைதளத்தில் துவங்க இருக்கிறது.

google news