Connect with us

latest news

ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 7000 mAh பேட்டரி ஸ்மார்ட்போன் – வெளியீடு எப்போ தெரியுமா?

Published

on

iTel-P40-3

ஐடெல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஐடெல் P40 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். ஐடெல் P40 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருந்த நிலையில், P40 பிளஸ் ஸ்மார்ட்போன் 7000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து ஐடெல் நிறுவனம் எவ்வித தகவலும் வழங்கவில்லை எனினும், இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம், விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி ஐடெல் P40 பிளஸ் ஸ்மார்ட்போன் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

iTel-P40-1

iTel-P40-1

ஆனாலும் சரியான வெளியீட்டு தேதி பற்றி எவ்வித தகவலும் இல்லை. ஐடெல் P40 பிளஸ் ஸ்மார்ட்போன் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையின் போது அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஐடெல் நிறுவனம் சந்தையில் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் பிரபலமாக அறியப்படுகிறது.

iTel-P40-2

iTel-P40-2

அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8 ஆயிரத்து துவங்கி அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

ஐடெல் P40 பிளஸ் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் :

6.8 இன்ச் HD+ பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
யுனிசாக் பிராசஸர்
4 ஜிபி ரேம்
4 ஜிபி மெமரி ஃபியூஷன் தொழில்நுட்பம்
64 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
13MP பிரைமரி கேமரா
0.3MP இரண்டாவது லென்ஸ்
8MP செல்ஃபி கேமரா
ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ்
டூயல் சிம் ஸ்லாட்
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ
யுஎஸ்பி டைப் சி போர்ட்
7000 எம்ஏஹெச் பேட்டரி
18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

iTel-P40

iTel-P40

ஐடெல் நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஐடெல் P40 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, ஆக்டா கோர் யுனிசாக் SC9863A பிராசஸர், 2 ஜிபி ரேம், 13MP பிரைமரி கேமரா, 0.3MP இரண்டாவது லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி போர்ட் போன்ஓற அம்சங்களை கொண்டிருந்தது.

google news