tech news
ஜஸ்ட் ₹25K தான்.. ஜெபிஎல்-ன் புது இயர்பட்ஸ் அறிமுகம் – என்ன ஸ்பெஷல்?
ஜெபிஎல் நிறுவனம் தனது முற்றிலும் புதிய ஃபிளாக்ஷிப் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ஜெபிஎல் Tour PRO 3 என அழைக்கப்படும் புது இயர்பட்ஸ் டூயல் டிரைவர்கள், 2-ம் தலைமுறை ஸ்மார்ட் சார்ஜிங் கேஸ் கொண்டிருக்கிறது. இதன் இயர்பட் ஒவ்வொன்றிலும் ஹைப்ரிட் டூயல் டிரைவர் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இவை அதிக ஒலி வைக்கும் போதும் இரைச்சலற்ற ஆடியோ அனுபவத்தை உறுதிப்படுத்தும். இத்துடன் 11 மில்லிமீட்டர் அளவில் டைனமிக் டிரைவர் உள்ளது. இவை சுத்தமான, தெளிவான பேஸ் மற்றும் வோக்கல்களை வெளிப்படுத்தும். இந்த இயர்பட்ஸ் ஜெபிஎல் ப்ரோ சவுண்ட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இது ஹை-ரெஸ் ஆடியோ மற்றும் LDAC வசதி வழங்குகிறது.
அழைப்புகளுக்காக இந்த இயர்பட்ஸ் 6-மைக் சிஸ்டம் கொண்டுள்ளது. இத்துடன் ஜெபிஎல் க்ரிஸ்டல் ஏஐ அல்காரிதம் உள்ளது. இது அழைப்புகளின் போது எதிர்தரப்பில் பேசுவோருக்கு நமது குரலை தெளிவாக கேட்பதை உறுதிப்படுத்துகிறது. இத்துடன் ஜெபிஎல்-இன் முற்றிலும் புதிய ட்ரூ அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில், நாய்ஸ் கேன்சலேஷன் வழங்குகிறது.
ஜெபிஎல் Tour Pro 3 மாடலில் ஜெபிஎல்-இன் ஸ்பேஷியல் 360 மற்றும் ஹெட்-டிராக்கிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வழங்கப்படும் ஸ்மார்ட் சார்ஜிங் கேஸ், வயர்லெஸ் ஆடியோ டிரான்ஸ்மிட்டராக வேலை செய்யும். இதில் உள்ள ஸ்கிரீனின் அளவு 30 சதவீதம் வரை அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் மியூசிக் பிளேபேக், அழைப்புகளை நிர்வகிப்பது, ID3 டேக், காலர் ஐடி மற்றும் மீடியோ விவரங்களை இயக்கலாம்.
புதிய ஜெபிஎல் Tour Pro 3 இயர்பட்ஸ் பிளாக் மற்றும் லேட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 299.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 25,170 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்க சந்தையில் இந்த இயர்பட்ஸ் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.