டெக் உலகின் முன்னணி ஜாம்பவான Jeff Bezos, எதிர்காலத்தில் வேலைகளில் நடக்க இருக்கும் மாற்றம் குறித்து முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூற்றின்படி, நம்மில் பலர் செய்யும் சாதாரண வேலைகள் எல்லாம் விரைவில் மெஷின்கள் மற்றும் AI மூலம் செய்யப்படலாம்.
எல்லாம் AI மயம்
Jeff Bezos கூறும் போது. நாள்தோறும் செய்யப்படும் பொதுவான வேலைகளை இனி மனிதர்கள் செய்ய வேண்டிய அவசியம் குறைந்து விடும். கணினி, ரோபோ தொடர்ந்து AI வளர்ச்சி அதிகரிப்பதால் இந்த வேலைகளை வேகமாகவும், தவறில்லாமலும் செய்து விடும்.
அதனால், பல வேலைகள் மறைய வாய்ப்புள்ளது. ஆனால், Jeff Bezos ஒரு முக்கியமான விஷயத்தையும் சொல்கிறார். இந்த பிரச்னை எல்லா வேலைகளும் போகாது. புதிய யோசனைகள் உருவாக்கும் திறன் உள்ளவர்களுக்கு மட்டும் எதிர்காலத்தில் மதிப்பு இருக்கும்.
மெஷின் வேலை செய்வது சரி. ஆனால் யோசிக்க முடியாது. அதனால், படைப்புத் திறனும், சிந்திக்கும் திறனும் உள்ளவர்கள் மட்டுமே எதிர்காலத்தில் தேவைப்படுவார்கள் என்று கூறுகிறார். புதிய யோசனை உருவாக்கும் மனிதர்களை மெஷின் மாற்ற முடியாது.
எதிர்காலத்தில் நல்ல வேலை வேண்டும் என்றால், நாமும் புதிய விஷயங்களை யோசிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள மட்டுமே வேண்டும். சாதாரண வேலைகளில் மட்டுமே நம்பிக்கை வைத்து இருக்க முடியாது. மொத்தத்தில், தொழில்நுட்பம் வளர்ந்தாலும், மனிதரின் யோசனை திறன் தான் முக்கியம். அதை வளர்த்துக் கொண்டால்தான் நல்ல நிலை கிடைக்கும்.