latest news
பட்ஜெட்டில் பவர் ஃபுல் பிராஸசர்.. 5000 mah பேட்டரி..12 ஜிபி ரேம்.. என்ன மாடல் தெரியுமா..?

இந்திய மொபைல் உற்பத்தி நிறுவனமான லாவா சீன ரக மொபைலுக்கு போட்டியாக புதிய மொபைலை களம் இறக்கி உள்ளது. அதன்படி லாவா ஸ்ட்ரோம் ப்ளே 5g மொபைல் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
லாவா ஸ்ட்ரோம் ப்ளே 5ஜி சிறப்பம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் அங்குல 1612 * 720 பிக்சல்கள் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளே 120 ஹெட்ஸ் ரெப்ரெஷ் ரேட்டுடன் உடன் வருகிறது. மேலும் இதில் ஆக்டோகோர் மீடியா டெக் டைமண்ட் சிட்டி 7060 என்ற பிராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இந்த லாவா ஸ்ட்ரோம் ப்ளே 5ஜி மொபைல் 50 எம்பி sony சென்சார் கொண்ட பின்புற முதன்மை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 8 எம்பி செல்பி கேமராவுடன் வருகிறது. மேலும் ip 64 ரேட்டிங் கொண்டு வருகிறது. சைடு மௌண்டன் பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வருகிறது.
மேலும் ஃபேஸ் அன்லாக் எஸ்டி கார்டு ஸ்லாட் போன்றவை வருகிறது. இதனுடன் 5000mah கொண்ட பெரிய பேட்டரி அதனை சார்ஜ் செய்வதற்கு 18w சார்ஜிங் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. மேலும் வைபை ப்ளூடூத் கனெக்டிவிட்டி யும் கொண்டுள்ளது.
இந்த லாவா ஸ்ட்ரோம் பிளே 5ஜி போனில் 6 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை 9999 ஆக இருக்கிறது. வருகிற ஜூன் 24ஆம் தேதி முதல் அமேசானில் விற்பனைக்கு வருகிறது.
