ஸ்மார்ட்போன் இல்லன்னா UPI பயன்படுத்த முடியாது என்று நினைத்திருந்த காலம் முடிந்து விட்டது. Reserve Bank கொண்டு வந்திருக்கும் UPI 123Pay வசதி மூலம், இப்போ சாதாரண phone-லேயே bank transfer, recharge, bill payment என எல்லாத்தையும் செய்ய முடியும்.
இதற்கு internet பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்ல. keypad போனே போதும். நீங்க செய்ய வேண்டியது என்னவென்றால், உங்கள் bank accountல் லிங்க் பண்ணிய மொபைல் எண்ணில்ருந்து குறிப்பிட்ட IVR numberக்கு கால் பண்ணணும்.
Call connect ஆனவுடன் வாய்ஸ் மெனு வரும். அதில் “பணம் அனுப்பவும்”, “ரீசார்ஜ் செய்யவும்”, “பில் செலுத்துவும்” உள்ளிட்ட ஆப்ஷன்கள் இருக்கும். நீங்கள் என்ன செய்யணும் என்பதை தேர்வு பண்ணிட்டு, பணம் அனுப்ப வேண்டிய நபர் mobile number அல்லது UPI ID எண்ட்ரி செய்யுங்கள்.
அதன் பிறகு அனுப்ப வேண்டிய தொகையை உள்ளிட்டு, last-ஆ உங்க UPI PIN-ஐ dial பண்ணினாலே transaction எளிதாக முடிந்துவிடும்! இந்த புது வசதியின் மூலம் ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் கூட UPI பண பரிவர்த்தனை செய்ய முடியும். Tamil, Hindi போன்ற பல மொழிகளில் இதை பயன்படுத்த முடியும். UPI 123Pay வந்ததால, keypad phone வைத்திருந்தாலே “digital payment” ஜஸ்ட் சிம்ப்ளா முடிந்திடும்.