latest news
நீங்களுமா!..கூகுளை தூக்கிவிட்ட மெட்டா..ஆனா ஆப்பிள்ல கூட இது இல்லப்பா..

இக்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல பல புதிய வகை கருவிகளை வல்லுனர்கள் உருவாக்கி கொண்டே வருகின்றனர். மொபைல் போன் ஸ்மார்ட் வாட்ச் போன்ற பலபல சாதனங்களை மக்களின் பயன்பாட்டிற்காக உருவாக்குகின்றனர். ஆப்பிள் கூகுள் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே பல வசதிகளுடன் ஸ்மார்ட் வாட்ச்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன.

smart watch features
இந்த ஸ்மார்ட் வாட்ச்களில் ஏற்கனவே பல வசதிகள் உள்ள நிலையில் தற்போது பிரபல மெட்டா நிறுவனம் தனது செயலியான வாட்ஸ் ஆப்பினை கூகுள் OS wear ஸ்மார்ட் வாட்ச்சில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி இந்த செயலியை இனி கூகுள் தளம் உள்ள ஸ்மார்ட் வாட்ச்களில் பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
இந்த செயலியின் மூலம் நாம் இனி நமக்கு வரும் செய்திகள் பார்ப்பது மட்டுமல்லாமல் செய்திகளை அனுப்பும் நபர்களுக்கு நாமும் செய்திகளை அனுப்பலாம். மேலும் இதன் மூலம் நாம் நமக்கு வரும் இன்கமிங் கால்கள் மூலமாக பேசுவது நாம் பிறருக்கு கால்களை மேற்கொள்வது எமோஜிகளை அனுப்புவது போன்ற பல வசதிகளை பெறலாம்.

can use whats app messages voice recording etc
இதனை பற்றி மெட்டா தலைவர் கூறுகையில் இந்த வசதியானது தற்போது கூகுள் OS உள்ள ஸ்மார்ட் வாட்ச்சான Wear OS 3 யில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் நாம் மற்ற்வர்களின் மொபைலோடு இணைப்பினை வைக்காமலே நாம் மற்றவர்களுடன் தொடர்பினை வைத்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

send messages via google wear OS
ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்ச்சில் மற்றவர்கள் நமக்கு அனுப்பும் செய்திகளுக்கான அறிவிப்பினை பார்த்து கொள்ள மட்டுமே முடியும். ஆனால் நாம் அவர்களுக்கு பதிலளிக்க முடியாது. ஆனால் மெட்டா மூலமாக தற்போது நாம் அவர்களுக்கு செய்திகளை அனுப்பி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
