latest news
18000க்கு கம்மியா டக்கரான மொபைல் வேணுமா?..அப்போ இத பாருங்க..
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போனகள் இல்லாதவர்களை காண்பதே அரிது. ஸ்மார்ட் போன்களின் விலையும் தற்போது குறைவாகவே உள்ளது. குறைந்த விலையில் நல்ல தரமான மொபைல் போன்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எனினும் அதில் உள்ள வசதிகளின் அடிப்படையில் அதன் விலையில் ஏற்றதாழ்வுகள் இருக்கும். தற்போது ரூ.18000க்கும் குறைவாக உள்ள ஸ்மார்ட் போன்களை காணலாம்.
iQoo Z6 5G:
இந்த மொபைலானது 6.58இன்ச் திரையுடன், ஆண்டிராய்டு12 OS, 50MP+2MP+2MP கேமராவையும், Snapdragon 695 ப்ராஸசரையும் கொண்டுள்ளது. மேலும் 5000mAh பேட்டரி தன்மையையும் கொண்டுள்ளது.
விலை: ரூ.17499
OnePlus Nord CE2Lite 5G:
இந்த மொபைலானது 6.59இன்ச் திரையுடன், ஆண்ட்ராய்டு 12 OS, 64MP+2MP+2MP கேமராவையும், Snapdragon 695 ப்ராஸசரையும் கொண்டுள்ளது. இந்த மொபைல் 5000mAh பேட்டரி தன்மையையும் கொண்டுள்ளது.
விலை: ரூ.17999
Infinix Note 30 5G:
Infinix Note 30 5G மொபைலானது 6.78இன்ச் திரையுடன் ஆண்ட்ராய்டு 13 OS உடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த மொபைல் 108MP+2MP+2AI கேமராவுடன் 5000mAh பேட்டரி சப்போர்ட்டுடனும் கிடைக்கின்றது.
விலை: ரூ.15999
VIVO T1 5G:
VIVO T1 5G மொபைலானது ஆண்ட்ராய்டு 12 OS உடன் 6.58இன்ச் திரையுடன் கிடைக்கின்றது. மேலும் Snapdragon 695 ப்ராஸசருடன் 50MP+2MP+2MP கேமராவுடன் 5000mAh பேட்டரி வசதியுடனும் நமக்கு கிடைகின்றது.
விலை: ரூ.15990
Redmi Note 12 5G:
Redmi Note 12 5G மொபைலானது ஆண்ட்ராய்டு 12 OS உடன் 6.67இன்ச் திரை மற்றும் 48MP+8MP+2MP கேமராவுடனும் 5000 mAh பேட்டரி அமைப்புடனும் கிடைக்கின்றது. மேலும் Snapdragon 4 Gen 1 ப்ராஸசரையும் கொண்டுள்ளது.
விலை:.ரூ.16999
Infinix Zero 5G 2023:
Infinix Zero 5G மொபைல் 50MP+2MP+2MP கேமராவுடன், 6.78இன்ச் திரையையுடனும் ஆண்ட்ராய்டு 12 OS உடன் 5000mAh பேட்டரி அமைப்புடனும் கிடைக்கிறது.
விலை: ரூ.14999
Samsung Galaxy F23 5G:
6.6இன்ச் திரையினை கொண்ட இந்த மொபைலானது ஆண்ட்ராய்டு 12 OS- ல் இயங்க கூடியது. மேலும் 50MP+8MP+2MP பின்புற கேமராவையும் Snapdragon 750G ப்ராஸசரையும் 5000mAh பேட்டரி தன்மையையும் கொண்டுள்ளது.
விலை: ரூ.15499