tech news
165Hz கவர் டிஸ்பிளே, கூகுள் ஜெமினி சப்போர்ட் – மாஸ் காட்டும் மோட்டோ போன் அறிமுகம்
மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரேசர் 50 அல்ட்ரா ப்ளிப் போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் IPX8 சான்று, அளவில் பெரிய 4 இன்ச் கவர் ஸ்கிரீன், கூகுள் ஜெமினி சப்போர்ட் என ஏராளமான அம்சங்கள் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் மடிக்கக்கூடிய 165Hz டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர், அட்ரினோ GPU, 12GB ரேம், 512GB மெமரி, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த மை யுஎக்ஸ் கஸ்டம் ஸ்கின் உள்ளது.
புதிய மோட்டோ ப்ளிப் போன் 4000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45W சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங், 5W ரிவர்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 32MP முன்பக்க கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய மோட்டோரோலா ரேசர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12GB ரேம், 512GB மெமரி மாடல் விலை ரூ. 99,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஜூலை 20 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. அறிமுக சலுகையாக குறுகி காலக்கட்டத்திற்கு ரூ. 5000 தள்ளுபடி, ரூ. 5000 உடனடி வங்கி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது இதன் விலை ரூ. 89,999 என குறைந்துவிடும்.