tech news
இது பயங்கரமா இருக்கே.. கேமிங் Tab உருவாக்கும் லெனோவோ
லெனோவோ நிறுவனம் சமீபத்தில் தான் லீஜியன் Y700 சீரிஸ் டேப்லெட் மாடலை தனது உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது லீஜியன் Y700 2024 மாடல் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி உள்ளது. இந்த மாடலில் புதிய பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
சமீபத்திய கீக்பென்ச் தகவல்களின் படி லீஜியன் Y700 (2024) மாடல் TB321FU எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டில் குவால்காம் நிறுவனத்தின் டாப் எண்ட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. பென்ச்மார்க் டெஸ்டில் இந்த மாடல் சிங்கில் கோரில் 2209 மற்றும் மல்டி கோரில் 6509 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் அதிகபட்சம் 12GB ரேம் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருப்பதைத் தொடர்ந்து புதிய லீஜியன் Y700 (2024) மாடல் வரும் மாதங்களில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். சீன வெளியீட்டைத் தொடர்ந்து இந்த மாடல் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும்.
லெனோவோ லீஜியன் Y700 2023 மாடலில் 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஜஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. மெமரியை பொருத்தவரை இந்த டேப்லெட் 12GB ரேம், 256GB மெமரி, 16GB ரேம் 512GB மெமரி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 8.8 இன்ச் 2.5K LCD டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் வரை பீக் பிரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க இரட்டை 13MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ், 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு இரட்டை யுஎஸ்பி டைப் சி போர்ட்கள், டிஸ்ப்ளே போர்ட் 1.4 உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.