Connect with us

latest news

சவுண்ட் பட்டாசா இருக்கும்.. புது இயர்பட்ஸ் அறிமுகம்..!

Published

on

ஒப்போ நிறுவனத்தின் முற்றிலும் புதிய என்கோ எக்ஸ்3 இயர்பட்ஸ் சீனாவில் அறிமுகமாகி இருக்கிறது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் புதிய இயர்பட்ஸ் மாடலையும் ஒப்போ அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்ஸ் டிசைன் மற்றும் அம்சங்களை பார்க்கும் போது இந்த மாடல் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3-யின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று தெரிகிறது.

ஒன்பிளஸ் தனது பட்ஸ் ப்ரோ 3 மாடலை கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஒப்போ இயர்பட்ஸ் மாடலில் டைனாடியோ வசதி மற்றும் 11 மில்லிமீட்டர் பேஸ் டிரைவர்கள், 6 மில்லிமீட்டர் டுவீட்டர்கள் உள்ளன. இவற்ருடன் டூயல் டி.ஏ.சி. யூனிட்கள் உள்ளன. இவை ஆடியோ தரத்தை மேம்படுத்துகின்றன. இந்த இயர்போன் 43 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

இதன் இயர்பட்களில் கேபாசிடிவ் டச் கண்ட்ரோல்கள், பின்ச் ஆப்ஷன்கள், ஸ்லைடிங் வால்யூம் அட்ஜஸ்ட் வசதி கொண்டுள்ளது. இத்துடன் ஏஐ சார்ந்த மூன்று மைக் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இயர்பட்ஸில் 50db வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸை யைனாடியோ டியூனிங் செய்துள்ளது. இத்துடன் IP55 தர வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

சீனாவில் புதிய ஒப்போ என்கோ எக்ஸ்3 விலை இந்திய மதிப்பில் ரூ. 11,800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த இயர்பட்ஸ்-க்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. விற்பனை அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகிறது. இந்த இயர்பட்ஸ் பிளாக் மற்றும் ஆஃப் வைட் நிறங்களில் கிடைக்கிறது.

google news