Connect with us

latest news

8GB ரேம், 6000mAh பேட்டரி, 45W சார்ஜிங்… வெயிட்டு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளியாகும் ஸ்மார்ட்போன்

Published

on

ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் என்ட்ரி லெவல் துவங்கி பிளாக்ஷிப் மாடல் என அனைத்து வகை பிரிவுகளிலும் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது. சீரான இடைவெளியில் ஒவ்வொரு விலை பிரிவிலும் ஒப்போ தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. அந்த வரிசையில், ஒப்போ நிறுவனம் K சீரிசில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய உள்ளது.

புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் வகையில் அந்நிறுவனம் டீசர்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ஒப்போ K13x 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் ஒப்போ இ-ஸ்டோர் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை நடைபெற இருக்கிறது.

ஒப்போ K13x 5ஜி ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் இதர விவரங்களை அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. எனினும், தற்போது இந்த ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ K13 5ஜி மாடலுடன் இணைவது உறுதியாகி இருக்கிறது.

விலையை பொருத்தவரை புதிய ஒப்போ K13x 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 15,999-க்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், இதன் மெமரி பற்றிய விவரங்கள் தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. முன்னதாக ஒப்போ K12x 5ஜி ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 12,999 விலையிலும், 8 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 15,999 விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டன.

இதுதவிர ஒப்போ சமீபத்தில் அறிமுகம் செய்த ஒப்போ K13 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 17,999 விலையில் கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 19,999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 பிராசஸர் மற்றும் 7000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

தற்போது லீக் ஆகியிருக்கும் ரீடெயில் பாக்ஸ் படங்களின் படி ஒப்போ K13x 5ஜி ஸ்மார்ட்போன் Flat டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இதன் மத்தியில் பன்ச் ஹோல் இடம்பெற்று இருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஒப்போ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ டீசர்களில் ஸ்மார்ட்போனின் சில்ஹவுட் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒப்போ K13x 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், 6000mAh பேட்டரி, 45W சார்ஜிங், புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

google news