Connect with us

tech news

ஃபேஸ்புக் சாட்; 3 பாகிஸ்தான் ஆப்-கள்… பிரமோஸ் இன்ஜீனியர் சிக்கியது எப்படி?

Published

on

இந்திய ராணுவத்தின் பிரமோஸ் ஏவுகணை பற்றிய ரகசியங்களை பாகிஸ்தானுக்குக் கசியவிட்ட இன்ஜினீயர் நிஷாந்த் அகர்வாலுக்கு நாக்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

நிஷாந்த் அகர்வால்

நாக்பூரில் உள்ள பிரமோஸ் ஏவுகணையின் அசெம்ப்ளி யூனிட்டில் பொறியாளராகப் பணியாற்றி வந்தவர் நிஷாந்த் அகர்வால். திறமையான பொறியாளராகப் பல்வேறு விருதுகளை வென்ற இவர், பிரமோஸ் ஏவுகணை பற்றிய ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளுக்கு கசிய விட்டிருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டில் மகாராஷ்ட்ரா மற்றும் மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் மற்றும் ராணுவ உளவுப் பிரிவினரால் கடந்த 2018-ல் கைது செய்யப்பட்டார். இவரது குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆயுள் தண்டனை விதித்து நாக்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பாகிஸ்தான் உளவாளிகள் பயன்படுத்திய 3 ஆப்-கள்!

நிஷாந்த் எப்படி பாகிஸ்தான் உளவாளிகளுக்கு இரையானார் என்பது குறித்து உ.பி தீவிரவாத தடுப்புப் பிரிவு விசாரணை அதிகாரி பங்கஜ் அஸ்வதி, தனது விசாரணை அறிக்கையில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதன்படி, நிஷாந்துக்குக் கடந்த 2017-ல் ஷீஜல் என்கிற பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் அறிமுகமாகியிருக்கிறார். இருவரும் ஃபேஸ்புக்கில் சாட் செய்து தங்கள் நட்பை வளர்த்திருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் லிங்க்டு இன்னிலும் இவர்கள் நட்பு வளரவே, இங்கிலாந்தைச் சேர்ந்த Hays ஏவியேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாகக் கூறி ஆசை வளர்த்திருக்கிறார். மேலும், ஷீஜல் அனுப்பிய லிங்க் மூலம் நிஷாந்தின் பெர்சனல் லேப்டாப்பில் Qwhisper, Chat to Hire and X-trust என்ற மூன்று செயலிகளை இன்ஸ்டால் செய்திருக்கிறார்.

அந்த செயலிகள் மூலம் பிரமோஸ் ஏவுகணை பற்றிய ரகசிய தகவல்களையும் திருடியிருக்கிறார்கள். அவர் பணியாற்றும் பிரமோஸ் ஏவுகணை நிறுவனத்தின் கொள்கைகளை மீறி அவை பற்றிய ரகசியத் தகவல்களைத் தனது பெர்சனல் லேப்டாப்பில் நிஷாந்த் வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *