latest news
ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமாக இந்தியர்கள் பாஸ்போர்ட் பெற்று வருகின்றனர். இதற்காக பாஸ்போர்ட் சேவாக்க் இயக்கப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதிலும் உள்ளவர்கள் புதிய பாஸ்போர்ட் பெறவும், ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அது சார்ந்த சேவைகளை பெற பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும், ஆன்லைனிலும் தங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்த நிலையில், பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் தளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், சில நாட்களுக்கு அதற்கான வலைதளம் இயங்காது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி நேற்றிரவு (அக்டோபர் 4) 8 மணி துவங்கி அக்டோபர் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவா வலைதள சேவைகள் பயன்பாட்டில் இருக்காது. இந்த தேதிகளில் பயனர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பம் சார்ந்த சேவைகள், நேர்முக தேர்வுக்கு நேரம் பெறுவது போன்ற சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
“பாஸ்போர்ட் சேவா வலைதளம் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 4 ஆம் தேதி இரவு 8 மணியில் இருந்து அக்டோபர் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பாட்டில் இருக்காது,” என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
வலைதளம் செயல்படாது என்பதால், பொது மக்கள் மட்டுமின்றி பாஸ்போர்ட் சேவா வலைதளத்தை வெளியுறவு விவகாரங்கள் துறை அதிகாரிகள், குடிவரவு பணியக அதிகாரிகள், காவல் துறையை சேர்ந்தவர்கள் என யாரும் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.