Connect with us

latest news

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

Published

on

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு வழங்குகிறது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 6,000 வழங்கப்படுகிறது. இந்த தொகை ரூ. 2000 வீதம் மூன்று தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியா முழுக்க அதிகபட்சம் 2 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யும் சிறு விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.

விவசாயிகள் இந்த திட்டத்தில் பங்கேற்க தகுதி இருப்பதையும், ஏற்கனவே திட்டத்தில் இணைந்திருப்பதை கீழே கொடுக்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி அறிந்து கொள்ள முடியும்..

பிஎம் கிசான் வலைதளம் செல்ல வேண்டும்.

வலைப்பக்கத்தில் பயன்பெறுவோர் பட்டியலை (Beneficiary List) இயக்கலாம்.

இனி மாநிலம், மாவட்டம், மற்றும் முகவரியை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.

இறுதியில் அறிக்கையை வழங்கக் கோரும் (Get Report) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதில் உங்களது பெயர் இடம்பெற்று இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு: வெளிப்படைத்தன்மையை வழங்கும் நோக்கில் பயனாளிகள் பட்டியல் பஞ்சாயத்து அலவலகங்களிலும் ஒட்டப்படுகிறது.

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17 ஆவது தவணை கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி ரூ. 2000 பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இந்திய பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்றதும் பிரதமர் மோடி இந்த தவணையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news