latest news
போக்கோ M5 விலை இவ்வளவு கம்மியா? உடனே ஆர்டர் பண்ணிடலாம் போலயே..!
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக் சேவிங் டேஸ் சேல் ஜூலை 15 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த நிலையில், சிறப்பு விற்பனை துவங்கும் முன்பே, குறிப்பிட்ட சில சலுகைகளின் விவரங்களை வெளியிட்டு உள்ளது. அத ன்படி போக்கோ M5 4ஜி மாடலுக்கு வேற லெவல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் ரூ. 12 ஆயிரத்து 499 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ M5 4ஜி மாடல் தற்போது ரூ. 7 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சலுகை விவரங்கள் :
போக்கோ M5 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் இந்திய சந்தையில் ரூ. 12 ஆயிரத்து 499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
தற்போது ப்ளிப்கார்ட் வலைதள சலுகையின் கீழ் போக்கோ M5 4ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் ரூ. 8 ஆயிரத்து 749 என்றும், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரத்து 749 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அதிரடி விலை குறைப்பு மட்டுமின்றி ப்ளிப்கார்ட் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி இணைந்து ரூ. 750 வரை தள்ளுபடி வழங்குகின்றன. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 7 ஆயிரத்து 999 என்றும் ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் மாறி விடும். ஆக்சிஸ் வங்கி கார்டு பயன்படுத்துவோர் ரூ. 500 தள்ளுபடி பெறலாம்.
இந்திய சந்தையில் ரூ. 12 ஆயிரத்து 499 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட போதே, போக்கோ M5 மாடல் சிறப்பான தேர்வாக இருந்தது. தற்போது ப்ளிப்கார்ட் வழங்கும் தள்ளபடியில் இது ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் தேர்வு செய்வதற்கான சிறப்பான மாடலாக விளங்குகிறது.
போக்கோ M5 அம்சங்கள் :
போக்கோ M5 மாடலில் 6.58 இன்ச் FHD+IPS LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 2400×1080 பிக்சல் ரெசல்யூஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், மாலி ஜி57 MC2 GPU, அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஹை-ரெஸ் ஆடியோ, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI, 50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 2MP மேக்ரோ லென்ஸ், 2MP போர்டிரெயிட் லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.