tech news
போக்கோ M6 புது மாடல் அறிமுகம் – என்ன ஸ்பெஷல்?
போக்கோ நிறுவனத்தின் M6 5ஜி புது மாடல் இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த மாடலில் 64GB மெமரி வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 4GB ரேம், 128GB மெமரி, 6GB ரேம், 128GB மெமரி மற்றும் 8GB ரேம், 256GB மெமரி என மூன்று வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது விரைவில் அறிமுகமாகும் 64GB மாடலின் விலை சற்று குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.
அம்சங்களை பொருத்தவரை போக்கோ M6 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 6100+ பிராசஸர், 6.74 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, இரண்டாவது லென்ஸ், 5MP செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14, 5000mAh பேட்டரி, 18W சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 5, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. மேலும் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளது.
இந்திய சந்தையில் புதிய போக்கோ M6 5ஜி ஸ்மார்ட்போன் கேலக்டிக் பிளாக், ஓரியன் புளூ மற்றும் போலரிஸ் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB + 128GB மாடல் விலை ரூ. 10,499, 6GB + 128GB மாடல் விலை ரூ. 11,499 மற்றும் 8GB + 256GB மாடல் விலை ரூ. 13,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
அந்த வரிசையில் போக்கோ M6 5ஜி மாடலின் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜூலை 20 ஆம் தேதி ப்ளிப்கார்ட் வலைதளத்தில் துவங்குகிறது.