tech news
அடுத்த வாரம் புது போன் அறிமுகம் செய்யும் போக்கோ – எந்த மாடல்?
போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புது ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஸ்மார்ட்போனிற்காக சியோமி நிறுவனம் பிரத்யேக மைக்ரோசைட் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் போக்கோ M6 பிளஸ் 5ஜி என்ற பெயரில் உருவாகிறது. இதில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள், டிசைன் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் 108MP பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என்றும் முன்புறம் ஹோல் பன்ச் டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் போக்கோ M6 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தோற்றத்தில் போக்கோ M6 5ஜி மாடலின் பின்புறம் டூயல் டோன் டிசைன், வைலட் நிற ஃபினிஷ் மற்றும் ஃபிளாட் எட்ஜ் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே உள்ளது. இதன் பின்புறம் டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ரிங் எல்இடி வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிக்ராட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. இந்த ஸமார்ட்போனின் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 14,999 வரை நிர்ணயம செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர இந்த மாடல் அமேசான் வலைதளத்திலும் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.