tech news
போக்கோ போனுக்கு ரூ. 5,000 விலை குறைப்பு – அமேசான் அறிவிப்பு
போக்கோ இந்தியா நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் போக்கோ X6 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய போக்கோ ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிக ரெசல்யுஷன் கொண்ட AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் ரூ. 24,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ X6 5ஜி ஸ்மார்ட்போனிற்கு தற்போது அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு அமேசான் இந்தியா தளத்தில் மட்டும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி போக்கோ X6 5ஜி 12GB ரேம், 512GB மெமரி மாடல் விலை ரூ. 24,999-இல் இருந்து ரூ. 21,999 என குறைந்துள்ளது.
அமேசான் தளத்தில் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. விலை குறைப்பு மட்டுமின்றி ICICI அல்லது HDFC வங்கி கார்டு பயன்படுத்தும் பயனர்களுக்கு ரூ. 1000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் போக்கோ X6 5ஜி விலை ரூ. 20,999 என மாறிவிடும்.
இதேபோன்ற விலை குறைப்பு 8GB ரேம், 256GB மெமரி மற்றும் 12GB ரேம், 256GB மெமரி மாடல்களுக்கும் அறவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இவற்றின் விலை முறையே ரூ. 21,999 மற்றும் ரூ. 23,999-இல் இருந்து ரூ. 17,999 மற்றும் ரூ.18,999 என மாறி விடும்.
அம்சங்களை பொருத்தவரை போக்கோ X6 5ஜி மாடலில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யுஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்ட்ராய்டு ஓ.எஸ் அப்கிரேடுகளும், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்குவதாக போக்கோ அறிவித்து இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14 ஓ.எஸ். கொண்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஹைப்பர் ஓ.எஸ். வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர், LPDDR4x ரேம், UFS 2.2 ரக ஸ்டோரேஜ், 5100mAh பேட்டரி, 67W சார்ஜிங் வசதி உள்ளது.