இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வலைதளம் அமேசான். ஸ்மார்ட்போன் தொடங்கி பல்வேறு மின்சாதனங்கள் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அவ்வப்போது விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில் அமேசான் வலைதளம் பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.
இந்த வரிசையில் அமேசான் வலைதளத்தில் தற்போது ஸ்மார்ட்போன் மாடலுக்கு அசத்தல் சலுகை மற்றும் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் ரியல்மி நிறுவன ஸ்மார்ட்போனிற்கு அமேசான் வலைதளத்தில் அதிரடி விலை குறைப்பு வழங்கப்படுகிறது.
அதன்படி பயனர்கள் ரியல்மி GT 7 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கும் போது அதிகபட்சம் ரூ. 15,000 தள்ளுபடி பெற முடியும். ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது GT 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை ரூ. 69,999 விலையில் அறிமுகம் செய்தது.
தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு 21 சதவீதம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 54,998 என மாறியுள்ளது.
விலை குறைப்பு மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 தள்ளுபடி, ரூ. 1,649 அமேசான் பே பேலன்ஸ், மாத தவணை முறையில் ரூ. 4316 வரை சேமிப்பு வழங்கப்படுகிறது.
அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர், 6.78 இன்ச் OLED பிளஸ் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 14, அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 5800mAh பேட்டரி, 120 வாட் அல்ட்ரா சார்ஜ், கனெக்டிவிட்டிக்கு 5ஜி, என்எப்சி, ப்ளூடூத், வைபை, ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு இருக்கிறது.