latest news
டுவிட்டரில் திடீரென இப்படி ஆகிடுச்சா? காரணம் இது தான்!
டுவிட்டர் தளத்தில் இருந்து நீக்கப்படாமல் இருக்க, அதனை தொடர்ச்சியாக பயன்படுத்துங்கள் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். எலான் மஸ்க்-இன் திடீர் அறிவிப்பு காரணமாக பயனர்களின் ஃபாலோயர்கள் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலம் டுவிட்டர் தளத்தை பயன்படுத்தாமல் இருப்பவர்களின் அக்கவுண்ட்கள் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அறிவிப்பின் மூலம் பலரது அக்கவுண்ட்கள் நீக்கப்படலாம். நீக்கப்படுவோரின் எண்ணிக்கை, பயனர்களின் ஃபாலோயர்கள் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த சில மாதங்களாக டுவிட்டர் தளத்தில் ஏராளமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எலான் மஸ்க் டுவிட்டர் தலைமை பொறுப்புக்கு வந்ததில் இருந்து, இது நடந்து கொண்டு வருகிறது. புளூ டிக் நீக்கம், நீண்ட டுவிட்டர் பதிவுகள், டுவிட்டர் புளூ பெயரில் சந்தா முறை என்று டுவிட்டர் ஏராள மாற்றங்களை சந்தித்துவிட்டது.
அடுத்த நடைபெற இருக்கும் மாற்றங்களின் வரிசையில் தான் எலான் மஸ்க்-இன் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி டுவிட்டர் தளத்தில் பயன்படுத்தாமல் இருக்கும் அக்கவுண்ட்கள் நீக்கப்படும். நீக்கப்படும் பயனர்கள் தளத்தில் இருக்க மாட்டார்கள் என்பதால், பயனர்களின் ஃபாலோயர் எண்ணிக்கை குறையும். எலான் மஸ்க்-இன் இந்த அறிவிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எலான் மஸ்க் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று டுவிட்டர் பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர கிரியேட்டர்களுக்கு பின்புலமாக செயல்படுவோருக்கு எலான் மஸ்க் தனது நன்றியை தெரிவித்தார். டுவிட்டர் தளத்தில் கிரியேட்டர்கள் ஈட்டும் வருவாய்க்கு முதல் 12 மாதங்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லை. இதைத் தொடர்ந்து பத்து சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருந்தார்.
டுவிட்டர் புளூ சந்தாதாரர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த எலான் மஸ்க் குறிப்பிட்ட சில அம்சங்களை டுவிட்டர் புளூ பயனர்களுக்கு மட்டுமே வழங்க முடிவு செய்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் புளூ சந்தா செலுத்தாதவர்களின் புளூ டிக் வெரிஃபிகேஷன் பேட்ஜ் நீக்கப்பட்டது. இதன் மூலம் பலருக்கு வழங்கப்பட்டு இருந்த புளூ டிக் அதிரடியாக நீக்கப்பட்டது. பின் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் புளூ டிக் திரும்ப வழங்கப்பட்டது.