Connect with us

latest news

மலிவு விலை Flagship போன்.. அந்தர் பல்டி அடித்த ரெட்மி?

Published

on

சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டு காம்பேக்ட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. மேலும், இந்த மாடல் ரெட்மி K80 சீரிசில் இடம்பெறும் என்றும் கூறப்பட்டது.

புதிய ஸ்மார்ட்போனில் மீடியாடெக் நிறுவனத்தின் டிமென்சிட்டி 9400 அல்லது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதோடு 6.3 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 6000mAh பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் குறைந்த விலை காம்பேக்ட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் திட்டத்தை ரெட்மி பிராண்டு கைவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த மாடல் சந்தையில் அறிமுகம் செய்யப்படாது. இது குறித்து டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ள தகவல்களில், ரெட்மி பிரான்டு சிறிய ஸ்கிரீன் ஸ்மார்ட்போனினை உருவாக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரெட்மியின் இந்த முடிவு உண்மையாகும் பட்சத்தில் காம்பேக்ட் அளவில் ஃபிளாக்ஷிப் மாடலுக்கான காத்திருப்பு தொடர்ந்து நீளும். சமீபத்தில் விவோ நிறுவனம் அறிமுகம் செய்த X200 ப்ரோ மினி மாடல் ஓரளவுக்கு சிறய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.

காம்பேக்ட் மாடல் அறிமுகம் செய்யப்படாத நிலையில், ரெட்மி பிரான்டு விரைவில் K80 மற்றும் K80 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

காம்பேக்ட் பிளாக்ஷிப் மாடலின் விலையை அந்நிறுவனம் ஓரளவுக்கு குறைவாக நிர்ணயம் செய்யும் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

google news