Connect with us

tech news

6500mAh பேட்டரி.. வெறித்தனமா ரெடியாகும் ரெட்மி போன் – எந்த மாடல்?

Published

on

சியோமி நிறுவனம் தனது முற்றிலும் புதிய பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அக்டோபர் மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய சியோமி 15 சீரிஸ் மாடல்கள் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரெட்மி பிராண்டு தனது ரெட்மி K80 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

முந்தைய ரெட்மி K70 சீரிஸில் இருந்ததை போன்று ரெட்மி K80 சீரிஸிலும்- ரெட்மி K80e, ரெட்மி K80 மற்றும் ரெட்மி K80 ப்ரோ என மூன்று மாடல்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. இது குறித்து டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு உள்ள தகவல்களில் ரெட்மி K80 சீரிஸ் மாடல்கள் ஹை-சிலிகான் சிங்கில்-செல் ரக பேட்டரிகளை கொண்டு டெஸ்டிங் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வெய்போ பதிவுகளில் ரெட்மி K80 சீரிஸ் மாடல்களில் குறைந்த பட்சம் 5960mAh மற்றும் 6060mAh பேட்டரி கொண்டிருக்கும் என்றும் இதே மாடல்களில் அதிகபட்சம் 6100mAh முதல் 6200mAh மற்றும் 6500mAh வரையிலான திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் ரெட்மி K80 சீரிஸ் மாடல்களில் அதிகபட்சம் 6500mAh திறன் கொண்ட சிங்கில் செல் பேட்டரி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இது இந்த விலைப்பிரிவில் இத்தகை பேட்டரி கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றுத்தரும் என்று தெரிகிறது. முந்தைய ரெட்மி K70 அல்ட்ரா மாடலில் அதிகபட்சம் 5500mAh பேட்டரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி K80 ப்ரோ மாடலில் 2K 120Hz OLED ஸ்கிரீன், புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP 3x கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. ரெட்மி K80 சீரிஸ் மாடல்களில் அதிகபட்சம் 120W வரையிலான சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

google news