latest news
பிரீமியம் விலையில் பக்கா இயர்பட்ஸ் அறிமுகம்- எந்த மாடல்?
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய ஓபன்-இயர் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. சோனி லின்க்பட்ஸ் ஓபன் என்ற பெயரில் இந்த மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த இயர்பட்ஸ் வெளிப்புற சத்தங்களை கேட்ட படியே இசையை அனுபவிக்க செய்கிறது.
இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 22 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. புதிய சோனி இயர்பட்ஸ்-இல் 11 மில்லிமீட்டர் ரிங் வடிவ டிரைவர்கள் உள்ளன. இதில் அதிக தரமுள்ள டைஃப்ராம் மற்றும் நியோடியம் மேக்னட்கள் உள்ளன.
இத்துடன் சோனி இன்டகிரேட்டெட் பிராசஸர் வி2 வழங்கப்பட்டுள்ளது. இவை அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை மிகத் தெளிவாக வெளிப்படுவதை உறுதிப்படுத்துகிறது. இதில் டிஜிட்டல் சவுண்ட் என்ஹான்ஸ்மென்ட் எஞ்சின் உள்ளது. இது அதிக தெளிவான, இரைச்சல் அற்ற அழைப்புகளை வழங்குகிறது.
இந்த அம்சம் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பின்னணியில் உள்ள சத்தத்தை தடுத்து, பயனரின் ஆடியோ மறுபுறம் தெளிவாக கேட்பதை உறுதி செய்கிறது. இந்த இயர்பட்ஸ் பயன்படுத்தும் போது பயனர்கள் வெளிப்புறம் என்ன நடக்கிறது என்பதை தெளிவாக கேட்க முடியும். ஓபன் ரிங் டிசைன் கொண்டிருப்பதால், வெளிப்புற சத்தம் பயனர்களுக்கு இடையூறு இன்றி கேட்கிறது.
இந்த இயர்பட்ஸில் அடாப்டிவ் வால்யூம் கண்ட்ரோல் வசதி உள்ளது. இது வெளிப்புற சத்தத்திற்கு ஏற்ப ஆம்பியன்ட் நாய்ஸ் அளவுகளை செட் செய்து கொள்ளும். பேட்டரியை பொருத்தவரை இந்த இயர்பட்ஸ்-ஐ முழு சார்ஜ் செய்தால் 22 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கிறது.
இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதை கொண்டு மூன்று நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 60 நிமிடங்களுக்கு பேக்கப் வழங்குகிறது.
இந்திய சந்தையில் புதிய சோனி லின்க்பட்ஸ் ஓபன் மாடலின் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் மாடலின் விற்பனை சோனி, அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்கள், ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.