latest news
கம்மி விலையில இயர்பட்ஸ் வேணுமா?..அப்போ இன்னைக்கே வாங்குங்க POCO Pods..

பிரபல மொபைல் நிறுவனமான POCO தற்போது தனது முதல் படப்பான இயர்பட்ஸை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயர்பட்ஸானது நமக்கு பிரபல இ-வணிக தளமான ஃபிலிப்கார்டில் விற்பனையாகிறது. மக்களுக்கு குறைந்த விலையில் தங்களது பொருள் கிடைக்க வேண்டும் எனும் நோக்கில் POCO நிறுவனம் இதனை தயாரித்துள்ளாதாக தெரிவித்துள்ளது.
இந்த POCO இயர்பட்ஸானது ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் உபயோகப்படுத்துமாறு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றி 10 மீட்டர் தூரத்திற்கு இதனை நாம் கனெக்ட் செய்து கொள்ளலாம். இதனை நாம் டைப்-சி கேபிள் மூலம் 1.5 மணி நேரம் சார்ஜ் செய்தால் போதுமானது.

poco earbuds
இதில் நமக்கு வியர்வை ஏற்பட்டால் அதனால் பட்ஸ் பாதிக்காமல் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் நமக்கு வரும் கால்களை பேசுமாறு மைக்ரோபோன்களும் உள்ளன. ஆனால் வெளிப்புற தேவையில்லாத சத்தங்களை குறைப்பதற்கான Noise Canstallation வசதி சற்று குறைவாகத்தான் உள்ளது.

poco pods earbuds
இந்த இயர்பட்ஸின் விலை ரூ.1199 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை நாம் மஞ்சள் மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கின்றது. இதனை நாம் புளூடூத் உதவியுடன் கனெக்ட் செய்து கொள்ளலாம்.
