latest news
கம்பெனி ஓனரை விட அதிக சொத்தை வைத்திருக்கும் ஊழியர்.. இது என்னங்கப்பா கூத்தா இருக்கு…
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீப் பால்மர் உலகின் பணக்காரர் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு வந்துள்ளார். இது கம்பெனியின் இணை நிறுவனர் பில் கேட்ஸை விட அதிகம் எனக் கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவன பங்குகள் லாபம் இந்த வருடம் 21 சதவீதம் உயர்ந்துள்ளது. ஓபன் ஏஐ நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் கைகோர்த்த நிலையில் யூஎஸ் ஸ்டாக் மார்க்கெட்டில் அதிக உச்சம் அடைந்து இருக்கிறது.
பால்மரின் 90 சதவீத சொத்துக்களான 157.2 பில்லியன் டாலர் சொத்துக்கள் மைக்ரோசாப்ட் பங்குகளாக தான் இருக்கிறது. ஆனால் பில்கேட்ஸின் மதிப்பான 156.7 பில்லியன் டாலர்கள் பாதி மட்டுமே மைக்ரோசாப்ட் பங்குகளாக இருக்கிறது. மீதி பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
21 பில்லியன் டாலர் மதிப்பில் கழிவு மேலாண்மை நிறுவனமான ரிப்பிளிக்கை சொந்தமாக வைத்து இருக்கிறார். 68 வயதான பில்கேட்ஸ், அவரது முன்னாள் மனைவி மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் மற்றும் அவரது நண்பர் வாரன் பஃபெட் ஆகியோருடன் இணைந்து உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றான $75 பில்லியன் கேட்ஸ் அறக்கட்டளையை உருவாக்கி அதில் பில்லியன் கணக்கான டாலர்களை செலுத்தியுள்ளார்.
20 வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த தொண்டு நிறுவனம் பில் கேட்ஸ் மற்றும் அவர் முன்னாள் மனைவியின் சொத்துக்களில் இருந்து 60 பில்லியன் டாலரை பயன்படுத்தி வருகின்றனர். கேட்ஸ் தனது நண்பர் பால் ஆலனுடன் 1975ல் தொடங்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கினார்.
2000ம் ஆண்டு வரை அதை நடத்தினார். அந்த நிறுவனத்தின் ஆரம்பகால ஊழியர்களில் ஒருவரான பால்மரை தலைமை நிர்வாக அதிகாரியாக மாற்றினார். பால்மர் 2014ல் ஓய்வு பெற்றார் மற்றும் அதே ஆண்டில் மைக்ரோசாப்டின் மிகப்பெரிய பங்குதாரரானார் என்பது குறிப்பிடத்தக்கது.