கடைகளில் பண பரிவர்த்தனை செய்வதற்கு மிகவும் எளிமையான வழிமுறைகளில் ஒன்று upi பரிவர்த்தனை. மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப மக்களின் வேகமான வாழ்க்கைக்கு இந்தப் பணம் பரிவர்த்தனை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கடைகளில் சில்லறைக்காக நிற்பது அல்லது சில்லறைக்காக சில இடங்களில் பஞ்சாயத்து நடப்பது போன்ற பிரச்சனைகளுக்கு upi பரிவர்த்தனை சிறந்த தீர்வாக உள்ளது.
பெருநகரங்களில் இந்த பணம் மாற்றும் முறை நடைமுறையில் இருந்தாலும் இன்னும் கிராமப்புறங்களில் சிறு கடைகளில் சாலைகளில் உள்ள சிறுகுறு தொழிலாளர்கள் சாதாரண பண மாற்று முறையை பயன்படுத்துகின்றன. இந்த சிறு குறு தொழிலாளர்களும் upi பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்திய அரசாங்கம் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி அந்த சிறு கடைகளில் 2000 ரூபாய் வரையும் பொருட்களை வாங்கும் பொழுது அதற்காக பாயிண்ட் .15% போனஸ் ஆக கொடுக்கப்படுகிறது.
2000*.15%=3, இந்த 3 ரூபாய் அந்தக் கடைக்காரர்களுக்கு சிறு ஊக்கத்தை கொடுக்கும். இந்த மாதிரி ஒவ்வொரு பரிவர்த்தனை செய்யும் பொழுதும் சிறுகுரு தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் இந்த போனஸ் அவர்கள் upi பரிவர்த்தனையை பயன்படுத்துவதற்கான ஒரு விழிப்புணர்வையும் என்கரேஜ் பண்ணும் விதமாக அமையும் என்று மத்திய அரசாங்கம் இந்த போனசை கொண்டு வந்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இனி கேஸ்லெஸ் பணப் பரிவர்த்தனை என்ற நோக்கில் அடிப்படையில் இந்த முயற்சிகளை முன்னெடுக்கிறது இந்திய அரசாங்கம். இந்த போனசை பெற வேண்டும் என்றால் bhim என்ற செயலில் பண பரிவர்த்தனை செய்தால் மட்டுமே போனஸ் பெற முடியும். மற்ற செயல்களில் இது போன்ற சலுகைகள் எதுவும் கிடைக்காது.
இந்த போனஸ் திட்ட முறை ஏற்கனவே நடைமுறையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இன்னும் பல பேருக்கு இது போன்ற சலுகைகள் இருப்பது இன்னும் பல பேருக்கு தெரியாமல் உள்ளது. அரசாங்கம் வெளியிட்டுள்ள இது போன்ற சலுகைகளை மக்கள் அறிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.