latest news
லட்சங்களில் சம்பாதிக்க எலான் ரூட் தான் சரியா இருக்கும்.. உடனே செஞ்சிட வேண்டியது தான்..!
டுவிட்டர் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பயனர்கள், கிரியேட்டர்களுக்கு Ad Revenue Sharing திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் டுவிட்டர் பயனர்கள் மற்றும் கிரியேட்டர்கள் தளத்தில் வருமானம் ஈட்ட முடியும். விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டும் டுவிட்டர், அதில் ஒரு பகுதியை பயனர்களுக்கு பங்கிட்டு கொடுக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது.
அந்த வரிசையில், பயனர்கள் வருவாய் ஈட்டி இருப்பதாக டுவிட்டர் சார்பில் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. வருவாய் ஈட்டிய டுவிட்டர் பயனர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட குறுந்தகவலின் ஸ்கிரீன்ஷாட்களை சமூக வலைதளத்தில் பதிவிட துவங்கி உள்ளனர்.
இதையும் படிங்க: நத்திங் போன் 2 குறைந்த விலையில் வாங்கிடலாம்.. எப்படி தெரியுமா?
சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில், ‘வாழ்த்துக்கள்@ கிரியேட்டரின் பெயர்! ரிப்ளைக்களில் கிடைத்த விளம்பர வருவாயில் உங்களின் பங்கீடாக, நீங்கள் டாலர்களை பெறுகின்றீர்கள். உங்களது பங்கு ஸ்டிரைப்-இல் இணைக்கப்பட்டு இருக்கும் அக்கவுன்ட்-இல் அடுத்த 72 மணி நேரத்திற்குள் செலுத்தப்பட்டு விடும். டுவிட்டரில் கிரியேட்டராக இருப்பதற்கு நன்றி,’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முதற்கட்டமாக டுவிட்டரின் Ads Revenue Sharing திட்டம், நிதி நிறுவனம் ஸ்டிரைப் பே-அவுட் சப்போர்ட் கொண்ட நாடுகளில் மட்டும் அமலுக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், பயனர்களுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கும் புதிய திட்டம் இந்தியாவில் இன்னும் அமலுக்கு வரவில்லை. எனினும், இந்த திட்டத்தில் விரைவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட்-க்கு (ஜேம்ஸ் டொனால்ட்சன்) டுவிட்டர் Ad Sharing Revenue திட்டத்தின் மூலம் 25 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் 21 லட்சம் ரூபாய் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் டுவிட்டர் பயனர்களில் பலருக்கு ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமான தொகை வழங்கப்பட இருக்கிறது.
இதையும் படிங்க: ஆர்டர் போட ரெடியா இருங்க.. ஐபோன் 14-க்கு வேற லெவல் தள்ளுபடி?
டுவிட்டர் தளத்தில் Ad Revenue Sharing திட்டம் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டுமே துவங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தில் பங்கேற்க, பயனர்கள் டுவிட்டர் புளூ சேவையில் இணைந்திருக்கவோ அல்லது வெரிஃபைடு நிறுவனமாகவோ இருப்பது அவசியம் ஆகும்.
இத்துடன் மூன்று மாதங்களில், தங்களின் டுவிட்டர் பதிவுகளுக்கு குறைந்தபட்சமாக சுமார் 50 லட்சம் இம்ப்ரஷன்களை பெற்றிருப்பது அவசியம் ஆகும். இவற்றை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் கிரியேட்டர் மானிடைசேஷன் வழிமுறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
டுவிட்டர் தளத்தில் விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டும் திட்டம் பற்றிய தகவல்கள் இன்னும் தெளிவற்ற முறையிலேயே இருந்து வருகிறது. இந்த குறையை தீர்க்கும் வகையில், விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டும் திட்டம் பற்றிய விவரங்கள் அடங்கிய வலைதள பக்கம் விரைவில் துவங்கப்படும் என்று டுவிட்டர் தெரிவித்து இருக்கிறது.
முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் டுவிட்டர் நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க், பயனர்கள், கிரியேட்டர்கள் டுவிட்டர் பதிவுகள் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாகவே இந்த திட்டம் தற்போது செயல்பாட்டு வரத் துவங்கி இருக்கிறது.