Connect with us

latest news

ஸ்மார்ட் டிவி-க்கென புதிய வீடியோ ஆப் உருவாக்கும் டுவிட்டர் – எலான் மஸ்க்!

Published

on

Elon-Musk

ஆன்லைன் சர்ச் சேவையில் கூகுள் சேவையும், வீடியோ தரவுகள் துறையில் யூடியூப் சேவையும் கடந்த பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கன்டென்ட் கிரியேட்டர்கள், இன்ஃபுளுயென்சர்கள், கேமர்கள் என பல்துறை சார்ந்த விருப்பம் கொண்டவர்களும் யூடியூப் தளம் துவங்கப்பட்ட 2005 ஆம் ஆண்டில் இருந்து வீடியோக்களை அதில் இருந்தே பார்க்க விரும்புகின்றனர்.

யூடியூப் வீடியோ ஆப் ஸ்மார்ட் டிவி-களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. மிக எளிமையாக ஸ்மார்ட் டிவியில் யூடியூப் ஆப் ஆன் செய்து விருப்பமுள்ள தரவுகளை கண்டுகளிக்க முடியும். தற்போது எலான் மஸ்க்-இன் டுவிட்டர் நிறுவனமும் இதே போன்ற சேவையை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

 

டுவிட்டர் தளத்தில் பயனர் ஒருவரிடம் உரையாடி வந்த எலான் மஸ்க் புதிய சேவை பற்றி பதில் அளித்துள்ளார். “ஸ்மார்ட் டிவி-க்களுக்கென பிரத்யேக டுவிட்டர் வீடியோ ஆப் அவசியமான ஒன்று ஆகும். டுவிட்டர் தளத்தில் நீண்ட நேர வீடியோக்களை நான் பார்ப்பதில்லை,” என்று டுவிட்டரில் பயனர் ஒரஉவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த எளான் மஸ்க், “இது வந்து கொண்டு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Twitter-Video-App-Elon-MuskTweet

Twitter-Video-App-Elon-MuskTweet

எலான் மஸ்க்-இன் பதிலை பார்த்த பயனர், அதற்கு நன்றி தெரிவித்து மற்றொரு கருத்தை பதிவிட்டார். அதில், “இதனை பாராட்டுகிறேன். யூடியூப் சந்தாவை ரத்து செய்து, அதனை மீண்டும் பார்க்காமல் இருக்க ஒரு நாள் வரும் என்பதை பார்க்கிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் தான், டுவிட்டர் தளத்தில் அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்கான வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கான வசதி வழங்கப்பட்டது. இந்த அம்சம் வெளியானதில் இருந்தே, பயனர்கள் டுவிட்டர் தளத்தில் திரைப்படங்களை பதிவேற்றம் செய்ய துவங்கிவிட்டனர். சமீபத்திய ஹாலிவுட் திரைப்படமான ஜான் விக் 4, வெளியான சில நாட்களிலேயே டுவிட்டர் தளத்தில் அப்லோடு செய்யப்பட்டு விட்டது.

எதிர்காலத்தில் பயனர்கள், டுவிட்டர் ஃபீட்களை ஸ்கிரால் செய்து கொண்டே வீடியோக்களை பார்க்க முடியும் என்றும் நீண்ட நேர வீடியோக்களை 15 நொடிகள் வரை ஃபார்வேர்டு மற்றும் பேக் சீக் செய்வதற்கான பட்டன்கள் வழங்கப்பட இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த அம்சங்கள் பற்றி எலான் மஸ்க் ஒரு மாதத்திற்கு முன்பே அறிவித்துவிட்ட நிலையில், இன்னமும் இந்த அம்சங்கள் வருவது பற்றி எந்த தகவலும் இல்லை.

google news