Connect with us

tech news

Netflix சேவையை வழங்கும் வோடபோன் ஐடியாவின் புது திட்டம்

Published

on

வோடபோன் ஐடியா நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்காக புதிய ரெட்எக்ஸ் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. புதிய போஸ்ட்பெயிட் திட்டம் பயனர்களுக்கு ஏராளமான பலன்களை வழங்குகிறது. மேலும், போஸ்ட்பெயிட் பயனர்களுக்காக அறிவிக்கப்பட்டு இருக்கும் முதல் திட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய போஸ்ட்பெயிட் திட்டம் பயனர்களுக்கு நெட்ப்ளிக்ஸ் (Netflix) சந்தா வழங்குகிறது. இந்த ரெட்எக்ஸ் திட்டத்தின் விலை ரூ. 1201 ஆகும். இது அதநவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ற பொழுதுபோக்கு, பயணம், பாதுகாப்பு, வாடிக்கையாளர் சேவை என பலதரப்பு சேவைகளை ஒருசேர உள்ளடக்கியுள்ளது.

வோடபோன் ஐடியா ரெட்எக்ஸ் திட்ட பலன்கள்:

புதிய ரெட்எக்ஸ் திட்டத்தில் பயனர்களுக்கு நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ் மற்றும் சன் நெக்ஸ்ட் என ஐந்து முன்னணி ஓடிடி தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் எல்லையற்ற பொழுதுபோக்கு தரவுகளை பயன்படுத்த முடியும். இத்துடன் ஆறு மாதங்களுக்கு ஸ்விக்கி ஒன் சந்தா வழங்கப்படுகிறது.

வருடத்திற்கு ஒருமுறை ரூ. 2999 மதிப்புள்ள 7 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சர்வதேச ரோமிங் திட்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் வருடத்திற்கு நான்கு முறை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களின் லாஞ்ச்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நார்டான் மொபைல் செக்யூரிட்டி சேவைக்கான 12 மாத சந்தா வழங்கப்படுகிறது. மேலும் பிரீமியம் வாடிக்கையாளர் சேவை மைய வசதி வழங்கப்படுகிறது.

google news