வயநாடு நிலச்சரிவு: இலவச சேவை வழங்கும் ஏர்டெல்

0
57
Airtel-
Airtel-Pic

கேரளா மாநிலம் வயநாட்டில் வரலாறு காணாத கனமழை காரணமாக நேற்று முன்தினம் இரவு தொடர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இரண்டாவது நாளாக மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஆபத்தில் கைக்கொடுக்கும் வகையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள வயநாட்டில் உதவிக்கரம் நீட்டியுள்ளது. அதன்படி இயற்கை பேரிடரில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏர்டெல் பிரீபெயிட் ரீசார்ஜ் காலாவதியான பயனர்களுக்கு இலவச சேவை வழங்கப்படுகிறது.

அதன்படி ஏர்டெல் பிரீபெயிட் ரீசார்ஜ் காலாவதியானவர்களுக்கு அந்நிறுவனம் தினமும் 1GB வரை இலவச மொபைல் டேட்டா, அன்லிமிட்டெட் காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்களை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை மூன்று நாட்களுக்கு பொருந்தும்.

பிரீபெயிட் பயனர்களை போன்றே போஸ்ட்பெயிட் சேவையை பயன்படுத்துவோருக்கும் ஏர்டெல் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட பயனர்கள் ஏர்டெல் போஸ்ட்பெயிட் இணைப்புக்கான மாதாந்திர கட்டணத்தை அதிகபட்சம் 30 நாட்களுக்குள் செலுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

இதுதவிர கேரளாவில் உள்ள ஏர்டெல்-இன் 52 ரீடெயில் ஸ்டோர்களை நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பகுதிகளாக மாற்றி உள்ளது. பொது மக்கள் தங்களால் முடிந்த நிவாரண பொருட்களை ஏர்டெல் ஸ்டோர்களில் வழங்கினால், அவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஏர்டெல் தெரிவித்து உள்ளது.

இயற்கை பேரிடரில் சிக்கி பரிதவிக்கும் கேரளா மாநிலத்திற்கு அனைவரும் தங்களால் முடிந்த உதவியை வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மற்றும் ஆளுநர் கோரிக்கை விடுத்தனர். மேலும், திரை பிரபலங்கள், நட்சத்திரங்கள் என பலத்தரப்பினரும் உதவி வழங்குவதாக அறிவித்து வருகின்றனர்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here