Connect with us

latest news

தேவையற்ற அழைப்புகளுக்கு குட்பை சொல்லுங்கள் – வாட்ஸ்அப்-இல் புது அம்சம் அறிமுகம்!

Published

on

Whatsapp-Call-featured-img

வாட்ஸ்அப் செயலியில் தேவையற்ற அழைப்புகளில் இருந்து பயனர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில், புதிய அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. மெட்டாவை தாய் நிறுவனமாக கொண்டு செயல்படும் வாட்ஸ்அப், ஸ்பேம் அழைப்புகளாளர்களை தூரத்தில் வைக்க புதிய செட்டிங் ஒன்றை வழங்குகிறது. இது போன்ற அழைப்புகள் பெரும்பாலும் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இல்லாத எண்களில் இருந்தே வரும்.

அந்த வகையில், புதிய அம்சம் அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து பயனர்களை தொந்தரவு செய்யும் அழைப்புகளை தவிர்க்க செய்கிறது. இந்த செட்டிங்கை செயல்படுத்தவில்லை எனில், பயனர்களுக்கு அவரது கான்டாக்ட் லிஸ்ட்-இல் இல்லாத எண்களில் இருந்தும் அழைப்புகள் வரும். அதாவது செட்டிங்கை செயல்படுத்தாதவர்களை வாட்ஸ்அப் பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும், வாய்ஸ் கால் மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

Whatsapp-Phone-Screen

Whatsapp-Phone-Screen

மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், வாட்ஸ்அப் பயனர்கள் இனி அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை சைலன்ஸ் செய்ய முடியும். முன்னதாக இந்த அம்சம் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. அந்த வரிசையில் தான் தற்போது இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் செயலியின் சமீபத்திய வெர்ஷன்களில் இந்த செட்டிங் வழங்கப்பட்டு வருகிறது. இந்த செட்டிங்கை செயல்படுத்தியவர்களுக்கு, அவர்களது கான்டாக்ட்-இல் இல்லாத எண்களில் இருந்து அழைப்புகள் வராது. எனினும், நோட்டிஃபிகேஷன் பகுதியில் கால் பற்றிய தகவலும், செயலியினுள் வழங்கப்படும்.

Whatsapp-Silence-Unknown-Callers

Whatsapp-Silence-Unknown-Callers

அந்த வகையில், அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து வரும் அழைப்புகளை பயனர்களால் தவிர்க்க முடியாது- இந்த அம்சம் அறிமுகம் இல்லாதவர்கள் பயனர்களை தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்ளும்.

வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு வெர்ஷனில் இந்த அம்சத்தினை செயல்படுத்த பயனர்கள் செட்டிங்ஸ் (Settings) > பிரைவசி (Privacy) > கால்ஸ் (Calls ) ஆப்ஷன்களில் சைலன்ஸ் அன்-நோன் காலர்ஸ் (Silence unknown callers) ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

ஐஒஎஸ் வெர்ஷனில் பயனர்கள் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் (Settings) > பிரைவசி (Privacy) > கால்ஸ் (Calls ) > சைலன்ஸ் அன்-நோன் காலர்ஸ் (Silence unknown callers) ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

Whatsapp-Silence-Unknown-Callers-

Whatsapp-Silence-Unknown-Callers-

கடந்த சில மாதங்களாக, இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் பயனர்கள் தங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாக குற்றம்சாட்டி வந்தனர். இதன் காரணமாக டுவிட்டர் டைம்லைன் முழுக்க வாட்ஸ்அப் சார்ந்த குற்றச்சாட்டுகள் கணிசமாக அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் தான் புதிய அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

google news