Connect with us

tech news

மென்பொருள் பொறியாளர்களின் வேலைக்கு ஏ.ஐ. வேட்டு வைக்குமா, பில் கேட்ஸ் சொல்வது என்ன?

Published

on

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, அவை மனிதர்களின் வேலையை பறித்துக் கொள்ளுமா என்ற அச்சம் பரவலாக எழுந்தது. நாளடைவில் இந்த விவகாரம் தொடர்பாக தொழில்நுட்ப துறையை சேர்ந்த பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிலர் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வேலைவாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், ஒருசிலர் ஏ.ஐ. தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்ளும் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், ஏ.ஐ. பற்றிய கேள்விக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பதில் அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், ஏ.ஐ. தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்றாலும் மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றே தெரிவித்தார். மேலும், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் நோக்கம் ஒரு பணியை விரைந்து செய்து முடிக்க உதவுவதும், பயிற்றுநர்களை போன்று செயல்படுவது தான். இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் திட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மிகமுக்கிய இடங்களில் இந்த தொழில்நுட்பம் நமக்கு உதவி செய்யும் என்பதே இந்த தொழில்நுட்பத்தின் வியக்கவைக்கும் விஷயம். சரியாக கையாளும் போது இந்த தொழில்நுட்பம் மனிதர்களின் பணியை மேலும் வேகமாக செய்துமுடிக்க உதவிகரமாகவே இருக்கும். மென்பொருள் பொறியாளர்கள் விவகாரத்தில், வரும் ஆண்டுகளிலும் மனித பொறியாளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கும்.

ஒருநாள் ஏ.ஐ. ஆட்டோமேஷன் முறை மாபெரும் வளர்ச்சி கண்டு ஏராளமான வேலைவாய்ப்புகளை பறிக்கும் நிலை நிச்சயம் வரும். எனினும், இதுபோன்ற சூழல் இன்னும் இருபது ஆண்டுகளில் உருவாவதும் கடினம் தான். தொழிலாளர்கள் மத்தியில் ஏ.ஐ. ஏற்படுத்தும் நீண்ட கால தாக்கம் பற்றி தற்போதைக்கு எதையும் கணிக்க முடியாது என்று தெரிவித்தார்.

ஏ.ஐ. என்ற வார்த்தை புழக்கத்திற்கு வந்ததில் இருந்தே, அவை பற்றிய வியப்பான பார்வை இன்றும் தொடர்கதையாகவே உள்ளது. இதே போன்று அவை மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடுமோ என்ற அச்ச உணர்வும் மேலோங்கியே இருக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில், ஏ.ஐ. குறித்து பில் கேட்ஸ் தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

tech news

க்யூட் லுக்கில் புது நோக்கியா போன்கள் இந்தியாவில் அறிமுகம்

Published

on

நோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கியா 235 4ஜி ஃபீச்சர் போன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களிலும் 2.8 இன்ச் IPS LCD ஸ்கிரீன் உள்ளது. இத்துடன் 9.8 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகின்றன. இந்த இரு போன்களிலும் UPI பரிவர்த்தனை, கிளவுட் செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளது.

இதன் கிளவுட் செயலிகளை கொண்டு பயனர்கள் பொழுதுபோக்கு, வியாபாரம் மற்றும் கல்வி சார்ந்த தகவல்களை பிரவுஸ் செய்ய முடியும். இத்துடன் நோக்கியாவின் பெயர்போன ஸ்னேக் கேம் (Snake Game) இரு மாடல்களிலும் பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது.

நோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கியா 235 4ஜி மாடல்களின் 2024 வேரியண்டில் 2.4 இன்ச் QVGA IPS LCD ஸ்கிரீன், யுனிசாக் T107 பிராசஸர், 64MB ரேம், 128MB மெமரியுடன் கிடைக்கின்றன. இத்துடன் மெமரியை 32GB வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

இரு மாடல்களிலும் S30+ ஓ.எஸ். உள்ளது. நோக்கியா 220 4ஜி மாடலில் LED டார்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. நோக்கியா 235 4ஜி 2024 மாடலில் 2MP பிரைமரி கேமரா உள்ளது. இரு மாடல்களிலும் 1250mAh பேட்டரி, USB C சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

2024 நோக்கியா 220 4ஜி மாடலின் விலை ரூ. 3,249 என்றும் 2024 நோக்கியா 235 4ஜி மாடலின் விலை ரூ. 3,749 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய நோக்கியா 220 4ஜி பிளாக், பீச் நிறங்களில் கிடைக்கிறது. நோக்கியா 235 4ஜி மாடல் பிளாக், புளூ மற்றும் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது.

இரு மாடல்களின் விற்பனை அமேசான், ஹெச்.எம்.டி. இந்தியா வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

google news
Continue Reading

tech news

விலை ரூ. 2420 தான்.. ஆப்பிளுக்கு போட்டியாக அறிமுகமான மோட்டோ Tag

Published

on

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ப்ளூடூத் சாதனம்- மோட்டோ டேக் (Moto Tag) சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ டேக் சாதனம் கூகுள் நிறுவனத்தின் ஃபைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க்கில் இயங்குகிறது. இதை கொண்டு பயனர்கள் டேக் செய்யப்பட்ட பொருட்கள் உலகில் எங்கு உள்ளது என்பதை கண்டறிய முடியும். ஃபைண்ட் மை டிவைஸ் ஆப் பயன்படுத்தி இவ்வாறு செய்யலாம்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா மாடலில் அல்ட்ரா வைட்பேண்ட் (UWB) சப்போர்ட் மூலம் டேக் மிக துல்லியமாக இயங்குகிறது. எதிர்காலத்தில் ஃபைண்ட் மை டிவைஸ் ஆப்-லும் UWB இண்டகிரேஷன் வழங்கப்படும்.

புதிய மோட்டோ டேக்-இல் உள்ள பட்டன் கொண்டு ஏற்கனவே இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போனை ரிங் செய்யவும், மோட்டோரோலா சாதனங்களை புகைப்படம் எடுக்க செய்யவும் முடியும். கூகுளின் ஃபைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க்கில் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் மூலம் பயனரின் தனியுரிமையை மோட்டோ டேக் பாதுகாக்கும். இதன் மூலம் பயனரின் இருப்பிட விவரத்தை யாரும் அறிந்து கொள்ள முடியாது.

இந்த சாதனம் IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு பயன்படுத்த முடியும். மேலும், இதன் பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.

மோட்டோ டேக் சாதனம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் வெளியாகிறது. இதன் விலை ஒன்றுக்கு 29 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2,420 என்றும் நான்கு யூனிட்களை வாங்கும் போது 99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8,260 என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த சாதனம் புளூ மற்றும் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

google news
Continue Reading

tech news

மொத்தம் 278GB.. லீக் ஆன பயனர் விவரங்கள்.. சிக்கலில் பி.எஸ்.என்.எல்.

Published

on

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பயனர் விவரங்கள் லீக் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பயனரின் மிக முக்கிய விவரங்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அரசு துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-இன் சர்வெர்களை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். இதனால் பி.எஸ்.என்.எல். சிம் கார்டு விவரங்களை ஹேக்கர்கள் அபகரித்துள்ளதாக தெரிகிறது.

இதோடு பயனரின் லொகேஷன் பதியப்படும் விவரங்கள், சர்வெர் சார்ந்த மிகமுக்கிய கடவுசொற்கள் உள்ளிட்டவை ஹேக்கர் வசம் சென்றுள்ளது. களவு போன விவரங்களை கொண்டு ஹேக்கர்கள் சிம் கார்டு குளோனிங், அடையாள திருட்டு மற்றும் அபகரிப்பு உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பாக மேற்கொள்ள அபாயம் அதிகம்.

முதற்கட்ட விசாரணையில் இந்த நாச வேலையில் கைபர்ஃபேண்டம் (Kiberphant0m) என்ற குழு தான் ஈடுபட்டது என தெரியவந்துள்ளது. இது சைபர் தாக்குதல் நடத்தியவரின் டார்க் வெப் முனையத்தில் யூசர்நேமாக இருக்கும் என்று தெரிகிறது. இதன் பின்னணியில் தனிபர் இருக்கிறாரா அல்லது குழுவாக இந்த நாச வேலை அரங்கேற்றப்பட்டதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பி.எஸ்.என்.எல். விவரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக டிஜிட்டல் ரிஸ்க் நிர்வாக நிறுவனமான அதெனியன் தெரிவித்தது. தற்போதைய தகவல்களின் படி பி.எஸ்.என்.எல். டெலிகாம் ஆபரேஷன்ஸ்-க்கு சொந்தமான 278GB டேட்டா களவு போனதாக கூறப்படுகிறது. ஹேக் செய்யப்பட்ட விவரங்களில் பயனர் விவரம் மட்டுமின்றி சர்வெர் தொடர்பான ஸ்னாப்ஷாட்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இதை கொண்டு இதேபோன்ற தாக்குதல்களை மீண்டும் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகும். ஹேக் செய்யப்பட்ட தகவல்களில் சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாள (IMSI) எண்கள், சிம் கார்டு விவரங்கள், பின் கோடுகள், கடவுசொற்கள் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இதில் பி.எஸ்.என்.எல்.-இன் SOLARIS சர்வெர்களின் ஸ்னாப்ஷாட்களும் இடம்பெற்றுள்ளது.

திருடப்பட்ட தகவல்களை ஹேக்கர் 5 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 4.18 லட்சத்திற்கு விற்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதோடு விவரங்களை கையாண்டு சிம் குளோனிங் மற்றும் தகவல் திருட்டு உள்ளிட்டை நடவடிக்கைகளிலும் ஈடுபட போவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

google news
Continue Reading

latest news

நண்பர்களுக்கு டிரெயின் டிக்கெட் புக் செய்தால் ஜெயில் தண்டனையா? விளக்கம் கொடுத்த ஐஆர்சிடிசி…

Published

on

By

குடும்ப உறுப்பினர்களை தவிர மற்றவர்களுக்கு ரயில் டிக்கெட்டை புக் செய்து கொடுத்தால் 10 ஆயிரம் அபராதம் இல்லை ஜெயில் தண்டனை என தகவல் பரவிய நிலையில் அதற்கு ஐஆர்சிடிசி விளக்கம் அளித்து இருக்கிறது.

இணையத்தில் உலா வரும் இத்தகவலுக்கு ஐஆர்சிடிசி தரப்பில் இருந்து மறுப்பு வெளியாகி இருக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு டிக்கெட் புக் செய்வது தடை செய்யப்பட்டு இருப்பதாக பரவும் செய்தி உண்மையில்லை. வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து நண்பர்கள், உறவினர்களுக்கு டிக்கெட் புக் செய்யலாம்.

இணையத்தில் உலா வரும் பதிவில், ஐஆர்சிடிசி கணக்கில் இருந்து குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும். மற்றவர்களுக்கு டிக்கெட் பதிவு செய்து கொடுத்தால் 10 ஆயிரம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டு கிடைக்கும் எனக் கூறப்பட்டு இருந்தது.

இதை தொடர்ந்து ஐஆர்சிடிசி இதற்கு மறுப்பு தெரிவித்து வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ஒரு வாடிக்கையாளர் தங்கள் கணக்கில் இருந்து மாதம் 12 டிக்கெட் யாருக்கு வேண்டுமென்றாலும் பதிவு செய்து கொள்ள முடியும். ஆதார் உள்ளீடு செய்து இருந்தால் மாதம் 24 டிக்கெட் பதிவு செய்ய முடியும். பயணத்தின் போது குறிப்பிட்ட ஆதாரை கொண்டவரும் பயணிக்க வேண்டும்.

தனிப்பட்ட கணக்கில் இருந்து புக் செய்யப்பட்ட டிக்கெட்டை விற்பனை செய்யக்கூடாது. அது சட்டவிரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news
Continue Reading

tech news

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் சிக்கல்… உதவியை நாடும் நாசா… என்ன நடந்தது?

Published

on

By

அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப முடியாத நிலை உருவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சோதனை முயற்சியாக போயிங் நிறுவனமும் நாசாவும் இணைந்து ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் 58 வயதாகும் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 61வயதாகும் புட்ச் வில்மோர் அனுப்பப்பட்டனர்.

சோதனைகளை முடித்துக்கொண்டு சுனிதா வில்லியம்ஸ் 13ம் தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர் திரும்ப முடியாமல் கடந்த 12 நாட்களாக ஆராய்ச்சி மையத்தில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சுனிதா வில்லியம்ஸ் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் கசிவே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

நாசாவுக்கும், போயிங் நிறுவனத்துக்கும் இது முன்னரே தெரியும் எனவும் கூறப்படுகிறது. 10 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

Trending