Connect with us

tech news

ஒழுங்கா ₹5 கோடி கொடுங்க.. மஸ்க்-க்கு நீதிமன்றம் குட்டு

Published

on

எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதும் அந்நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அப்போது நிறுவனத்தில் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் மிகமுக்கியமான ஒன்றாகவும், பலராலும் குற்றம்சாட்டப்பட்ட முடிவுகளில் ஒன்றாக எலான் மஸ்க்-இன் பணி நீக்க நடிவடிக்கை இருந்தது.

இவர் பொறுப்பேற்றதும், டுவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்களில் 70 சதவீதம் பேரை எலான் மஸ்க் அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இவரது திடீர் பணிநீக்க நடவடிக்கையால் பலர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் தான் கேரி ரூனி. டுவிட்டர் ஐரோப்பிய தலைமையகத்தில் மூத்த ஊழியராக பணியாற்றி வந்தார். எனினும், எலான் மஸ்க் பொறுப்பேற்றதும், கேரி ரூனி எவ்வித விளக்கமும் அளிக்கப்படாமல் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து கேரி ரூனி நீதிமன்ற உதவியை நாடினார். சட்டப் போராட்டம் நடத்திய கேரி ரூனிக்கு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பில் எக்ஸ் நிறுவனம் கேரி ரூனிக்கு 5,50,000 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 5 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு முதல் டுவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் கேரி ரூனி.

எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதும் துவங்கிய டுவிட்டர் 2.0 திட்டத்தின் கீழ் ஊழியர்கள் நீண்ட நேரம் உழைக்க வேண்ட இருக்கும், இதற்கு ஒப்புக் கொள்பவர்கள் பணியில் தொடரலாம், விருப்பம் இல்லாதவர்கள் வேலையைவிட்டு செல்லலாம் என்று கோரும் மின்னஞ்சலை எலான் மஸ்க் அனைத்து ஊழியர்களுக்கும் அனுப்பினார்.

அந்த மின்னஞ்சலில் விருப்பம் உள்ளவர்கள் ஆம் என்று கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். விரும்பாதவர்கள் விருப்பமில்லை என்று கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இரு ஆப்ஷன்களில் எதையும் தேர்வு செய்யாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மின்னஞ்சலை எதிர்கொண்ட கேரி ரூனி, அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்தார்.

இதனிடையே கடந்த நவம்பர் 19, 2022 ஆம் ஆண்டு கேரி ரூனி பணிநீக்கம் செய்யப்பட்டாக டுவிட்டர் நிறுவனம் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியது. இதை எதிர்த்து கேரி ரூனி சட்டப் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

google news