latest news
ஆற்றல் குறைபாடுள்ளவர்களுக்கு அசத்தல் அம்சங்கள் அறிமுகம் செய்த ஆப்பிள்!
ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களில் முற்றிலும் புதிய மென்பொருள் அம்சங்களை அறிவித்து இருக்கிறது. புதிய அம்சங்கள் பல்வேறு குறைபாடு கொண்டிருப்பவர்கள் மற்றும் தகவல் பரிமாற்ற சவால்களை எதிர்கொண்டு வருவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ஆன்-டிவைஸ் மெஷின் லெர்னிங் பயன்படுத்தி, பயனரின் தனியுரிமையை பாதுகாத்து, அனைவருக்குமான சாதனங்களை வழங்க வேண்டும் என்ற ஆப்பிள் நிறுவன குறிக்கோளை வெளிப்படுத்தும் வகையில் புதிய அம்சங்கள் அமைந்திருக்கின்றன. அக்ஸசபிலிட்டியை மேம்படுத்தும் வகையில், ஆப்பிள் அறிமுகம் செயதிருக்கும் சில புதிய அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
அறிவாற்றல் குறைபாடு உள்ளவர்களுக்காக அசிஸ்டிவ் அக்சஸ்
அசிஸ்டிவ் அக்சஸ் (Assistive Access) திட்டத்தின் கீழ் அறிவாற்றல் குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் புரிந்து கொண்டு பயன்படுத்தும் வகையில் ஆப்ஸ் மற்றும் அனுபவங்கள் மாற்றப்பட்டு இருக்கிறது. இது மக்கள் வழங்கிய கருத்துக்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அம்சம் போன் மற்றும் ஃபேஸ்டைம், மெசேஜஸ், கேமரா, மியூசிக் உள்ளிட்டவை இயக்க அதிக காண்டிராஸ்ட் பட்டன்கள், அளவில் பெரிய எழுத்துக்கள், குறைபாடுள்ளவர்களின் நம்பத்தகுந்த உதவியாளர்களுக்கு விசேஷ டூல்கள் வழங்கப்படுகின்றன. எழுத்து வடிவில் அம்சங்களை இயக்க விரும்புவோருக்காக சிறப்பான தோற்றத்தை வழங்க க்ரிட் (Grid) சார்ந்த லே-அவுட் அல்லது ரோ (Row) சார்ந்த லேஅவுட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
லைவ் ஸ்பீச் மற்றும் பெர்சனல் வாய்ஸ்
லைவ் ஸ்பீச் அம்சம் கொண்டு பயனர்கள் டைப் செய்யும் தகவல்கள் போன் அல்லது ஃபேஸ்டைம் அழைப்புகளில் குரல் வடிவில் சத்தமாக ஒலிக்கும். இந்த அம்சத்தினை பயனர்கள் மற்றவர்களிடம் நேரில் உரையாடும் போதும் பயன்படுத்திக் கொள்ளலாம். எளிதில் உபயோகிக்க, பயனர்கள் அடிக்கடி பயன்படுத்த நினைக்கும் வார்த்தைகளை தனியே சேமித்துக் கொள்ள முடியும்.
பெர்சனல் வாய்ஸ் அம்சம் கொண்டு பயனர்கள் தங்களின் குரல் போன்றே கேட்க்கும் ஒலியை எளிமையாகவும், பாதுகாப்பாகவும் உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த அம்சம் சாதனத்தில் உள்ள ஆன்-டிவைஸ் மெஷின் லெர்னிங் கொண்டு பயனர் விவரங்களை தனிமைப்படுத்தி, பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது. இந்த அம்சம் லைவ் ஸ்பீச் உடன் இணைந்து செயல்படுகிறது.
மேக்னிஃபயரின் டிடெக்ஷன் மோடில் பாயிண்ட் அண்ட் ஸ்பீக்
மேக்னிஃபயரில் (Magnifier) உள்ள பாயிண்ட் அண்ட் ஸ்பீக் அம்சம் பார்வை குறைபாடு உள்ளவர்கள் பொருட்களின் மீது எழுதப்பட்டு இருக்கும் சிறிய அளவிலான வார்த்தைகளை அறிந்து கொள்ள உதவுகிறது. இது கேமரா ஆப், LiDAR ஸ்கேனர், ஆன்-டிவைஸ் மெஷின் லெர்னிங் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி பயனர்கள் தொடும் பட்டன்களில் உள்ள எழுத்துக்களை எடுத்துரைக்கும். இதர மேக்னிஃபயர் அம்சங்களுடனும் சீராக இயங்கும். பயனர்களின் அருகில் இருக்கும் மக்கள், கதவுகள் மற்றும் படங்களை பற்றி எடுத்துரைக்கும்.
கூடுதல் அம்சங்கள்
– காது கேட்கும் குறைபாடு உள்ள மேக் பயனர்கள் மேட் ஃபார் ஐபோன் ஹியரிங் சாதனங்களை தங்களது சவுகரியத்திற்கு ஏற்ப அட்ஜ்ஸட் செய்து கொள்ளலாம்.
– குரல் மூலம் டெக்ஸ்ட் எடிட் செய்வோர் சரியான வார்த்தையை பொனெடிக் பரிந்துரைகளில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். ஐபோன், ஐபேட் அல்லது மேக் சாதனங்களில் வாய்ஸ் கண்ட்ரோல் கைடு மூலம் டச் மற்றும் டைப்பிங்கிற்கு மாற்றாக எவ்வாறு வாய்ஸ் கமாண்ட்களை பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
– ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் உள்ள ஸ்விட்ச் கண்ட்ரோல் வசதியை கொண்டு எந்த ஸ்விட்சையும் விர்ச்சுவல் கேம் கண்ட்ரோலராக பயன்படுத்தி கேம்களை விளையாட முடியும்.
– பார்வை குறைபாடு உள்ளவர்கள் ஃபைண்டர், மெசேஜஸ், மெயில், காலெண்டர் மற்றும் நோட்ஸ் போன்ற மேக் (Mac) ஆப்களில் எழுத்துக்களின் அளவை தங்களது வசதிக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.
– மெசேஜஸ் மற்றும் சஃபாரியில் குயிக் அனிமேஷன்களை விரும்பாதவர்கள் மோஷன், ஜிஃப் உள்ளிட்டவைகளை படமாக வைத்துக்கொள்ள முடியும்.
– வாய்ஸ்ஓவர் பயனர்கள் சிரி குரல்களை மிகவும் இயற்கையாக ஒலிக்க செய்யலாம். இத்துடன் சிரி எப்படி பேச வேண்டும் என்பதை சிரியின் பேச்சு வேகத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் அம்சங்கள் இந்த ஆண்டு இறுதியில் அனைவரின் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது.