latest news
ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…
பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும் அனேக கோவில்களில் பிரசாதமாக தயிர் சாதம், லெமன் சாதம், கற்கண்டு சாதம், புளி சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், பொங்கல், சக்கரைப் பொங்கல் போன்றவை வழங்கப்படும்.
ஆனால் கோவில் திருவிழா ஒன்றில் பிரசாதமாக ப்ரோட்டா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தியை கேள்விப்பட்டவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போனார்கள். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரசித்தி பெற்ற இக்கோவில் திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அக்கம் பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்களும், வெளியூர்களில் பணி செய்பவர்களும் ஆர்வத்துடன் பங்கற்று வருவதாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் நடத்தப்படும் இக்கோவில் திருவிழாவின் இந்தாண்டு திருவிழா தினசரி பூஜைகளுடன் பக்தி மயமாக கொண்டாடப்பட்டது. மேளதாளங்கள் முழங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டங்கள் கலைகட்டியிருந்தது.
இந்நிலையில் திருவிழாவின் இறுதி நாள் அன்று பக்தர்களுக்கு ப்ரோட்டா பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்ய பத்தாயிரம் ப்ரோட்டாக்கள் தயார் செய்யப்பட்டதாக விழாக்கமிட்டி சார்பில் சொல்லப்பட்டது.
கோவிலில் வழங்கப்படும் பிரசாதங்களில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காகவே ப்ரோட்டாவை பிரசாதமாக வழங்கபட்டதாக சொல்லப்பட்டது. இப்படி வித்தியாசம் காட்டுவதால் அடுத்த ஆண்டு வரை பகதர்களின் நினைவில் பத்திரகாளி அம்மன் கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதம் நிற்கும் எனவும் சொல்லப்பட்டது.
கடந்த ஆண்டு திருவிழாவின் போது சப்பாத்தி வழங்கப்பட்டது அதிக வரவேற்பை பெற்றதால் இந்தாண்டு ப்ரோட்டா வழங்கப்பட்டதாக சொல்லபட்டது.