Uncategorized
தீவிரமடையும் பருவ மழை?…சராசரியை கடந்த சதவீதம்!…
தென் மேற்கு பருவ மழை, வட கிழக்கு பருவ மழை பொழிவு தான் தமிழகத்திற்கான மழைப் பருவங்கள். இதில் தென் மேற்கு பருவ மழை ஜுன் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழ் நாட்டை பொறுத்த வரை வட கிழக்கு பருவ மழை இயல்பை விட அதிகமாகவே இருந்தது.
காற்றழுத்த தாழ்வு நிலை, இடி, மின்னலுடன் கூடிய மழை என கட்டுக்கடங்காத வெள்ளம் வந்த அளவில் கொட்டித் தீர்த்தது மழை. இந்நிலையில் தற்போது பெய்து வரும் தென் மேற்கு பருவ மழை சராசரியை விட ஐம்பத்தி ஐந்து சதவீதம் (55%) கூடுதலாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.
தமிழ் நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் காட்டி வருகிறது. கேரளாவில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. வானிலை ஆய்வு மைய கணக்கீட்டின்படி ஜூன் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து வருகிற செப்டம்பர் மாதம் நான்காம் தேதி வரை தென் மேற்கு பருவ மழையின் காலமாகவே பார்க்கப்படுகிறது. அதன்படி தமிழ் நாட்டில் கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஜூலை இருபத்தி ஒன்பதாம் தேதி வரை தமிழ் நாட்டில் நூற்றி எழுபத்தி ஒன்பது புள்ளி மூனு (179.3 mm)மி.மீ மழை பெய்துள்ளது.
இந்த காலகட்டத்தில் பெய்ய வேண்டிய மழையின் சராசரி நூற்றி பதினைந்து புள்ளி ஆறு மில்லி மீட்டராக(115.6 mm) இருக்க வேண்டும். இந்த ஆண்டு இதுவரை பெய்துள்ள மழை அளவை ஒப்பிட்டு பார்க்கும் போது சராசரியை விட ஐம்பத்தி ஐந்து சதவீதம் (55%) அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த தென் மேற்கு பருவ மழையால் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்கள் அதிக மழை பொழிவை பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டிருக்கிறது.