govt update news
இனிமே வளவளன்னு அட்ரஸ் தேவையில்லை.. வந்தாச்சு டிஜிபின்.. முழு விவரம் இதோ

டிஜிபின் என்பது இந்தியாவின் ஐஐடி ஹைதராபாத் மற்றும் இஸ்ரோ ஆகியவற்றுடன் இணைந்து அஞ்சல் துறையால் உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த நாடு தலைவியை புவிசார் குறியீட்டு முகவரி அமைப்பாகும். இது இந்தியாவை தோராயமாக 4*4 மீட்டர் கட்டங்களாக அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகை இதன் அடிப்படையில் ஒரு தனித்துவமான 10 எழுத்து குறியீட்டை ஒதுக்குகிறது.
இப்பொழுது நாம் நம்முடைய முகவரியை ஒரு ஒரு மூன்று நான்கு வரிகளில் எழுதுகிறோம். இனி இந்த மாதிரி வளவளவென்று எழுதத் தேவையில்லை. இந்த ஒரு பின் இருந்தாலே போதும் அந்த நபரின் குறிப்பிட்ட முகவரியை இதன் மூலம் கண்டறியலாம்.

digipin
ஆதார் கார்ட், லைசன்ஸ், பான் கார்டு மற்றும் கொரியர் பார்சலில் இந்த பத்து டிஜிட் எண்கள் இருந்தால் போதும் ஒரு குறிப்பிட்ட நபரின் அனைத்து முகவரியும் இதிலேயே அடங்கிவிடும் என்பதால் அந்த நபரைப் பற்றிய முழு விபரத்தையும் அறிந்து கொள்ள முடியும். இந்த முறையை இந்தியாவில் தபால் துறையால் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதற்கு இந்திய தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் மேப்பில் உங்களுடைய வீடு எங்கு உள்ளது என்று சரியாக கண்டுபிடித்து அடையாளப்படுத்தப்பட்டால் போதும் அதில் ஒரு பத்து இலக்க எண்கள் வரும். அந்த எண் தான் உங்களுடைய டிஜிபின். இந்த எண்களை பயன்படுத்தி கொரியர் பார்சல் பயன்படுத்தலாம். இதன் மூலம் தெளிவான முகவரியை கண்டறிந்து பார்சல் உரியவர் இடத்தில் ஒப்படைக்கப்படும்.
