latest news
மங்காத்தா ஆட நினைத்த கொள்ளையன்…மண்ட பத்திரம்னு சொன்ன போலீஸ்…
திருவண்ணாமலை அசலியம்மன் கோவில் தெருவில் நகைக்கடை நடத்தி வருபவர் நரேந்திர குமார். அதே பகுதியில் ஹன்ஸ்ராஜ் என்பவரும் நகைக் கடை வைத்திருக்கிறார். இந்நிலையில் நரந்திர குமாரின் மகன்களான ஜித்தேஷ், ஹரிஹந்த் ஆகிய இருவரும் கடத்தப்பட்டிருக்கின்றனர். இது குறித்த புகாரின் பெயரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்திருக்கின்றனர்.
இந்த விசாரணையின் முடிவில் ஹன்ஸ்ராஜ் தான் நரேந்திர குமாரின் மகன்களை கடத்தியதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். வியாபாரத்தில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து வந்திருக்கிறார் ஹன்ஸ்ராஜ், அதே போல தன்னிடம் இருந்த நகை, பணத்தை வைத்து சூதாடி அதனால் தனது சொத்துக்களை இழந்திருக்கிறார்.
இந்த விரக்தியில் தான் பெங்களூருவைச் சேர்ந்த பில்லா,பிரவின், சீனு, முயல் (எ) ராஜ்குமார் நான்கு பேரை திருவண்ணாமலைக்கு வரவழைத்து நரேந்திர குமாரின் மகன்களை கடத்த திட்டமிட்டுருக்கிறார்.
ஜித்தேஷ், ஹரிஹந்த் இருவரும் தங்களது இரு சக்கர வாகணத்தில் வந்து கொண்டிருந்த போது அவர்களை வழிமறித்த கும்பல் வலுக்கட்டாயமாக தாங்கள் வந்த காரில் ஏற்றியுள்ளனர். பெங்களூருவிற்கு கடத்தி செல்ல திரட்மிடப்பட்டிருந்த நிலையில் மேல்செங்கம் சுங்கச்சாவடி அருகே வந்துகொண்டிருந்த காரை நிறுத்தி காவல் துறையினர் சோதித்தபோது கடத்தல் திட்டம் பற்றி தெரிய வந்திருக்கிறது.
முன்னதாக மகன்கள் இருவரையும் விடுவிக்க எழுபது லட்ச ரூபாயை கேட்டிருக்கிறார் ஹன்ஸ்ராஜ், பத்து லட்ச ரூபாயை முன்பணமாக வாங்கியிருக்கிறார். நரேந்திர குமார் மீதமுள்ள பணத்தினை கொடுக்க தாமதமாக்கி விடக்கூடாது என்பதற்காக ஜித்தேஷ், ஹரிஹந்த் இருவரையும் தனது கூட்டாளிகளை வரவழைத்து பெங்களூருவிற்கு கடத்திச் செல்ல திட்டம் தீட்டியிருக்கிறார். அதற்குள் துரிதமாக செயல் பட்ட திருவண்ணாமலை காவல் துறையனர் கடத்தல்காரர்களை மடக்கி பிடித்தனர். இந்த கடத்தல் திட்டத்திற்கு ஒத்துழைத்த மேலும் ஆறு பேரை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.