Connect with us

latest news

லைக்ஸுக்காக முதியவரை தீக்குளிக்க தூண்டிய யூடியூபர்… காவல்துறை எடுத்த அதிரடி முடிவு…

Published

on

டிஜிட்டல் மையத்தால் வீடியோ எடுத்து சம்பாதிக்கும் பழக்கம் இன்று பலருக்கும் அதிகரித்திருக்கிறது. ஆனால் லைக்ஸுக்காக ஒருவரை தீக்குளிக்க தூண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடியை சேர்ந்த  வியாபாரி பாஸ்கருக்கும், அவரின் பக்கத்து வீட்டுக்காரரான பாலசுப்பிரமணியனுக்கும் அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது. இதனால் பாஸ்கர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அப்பகுதியில் வசித்த விக்னேஸ்வரன் என்பவர் கவனித்து வந்துள்ளார்.

அவர் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வந்ததால் இந்த பிரச்சினையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்கிறார். அதை எடுத்து பாஸ்கரனிடம் பேசி உங்கள் பிரச்சினையை கலெக்டர் அலுவலகத்தில் வைத்தால் உடனே தீர்வு கிடைக்கும் என ஆசை காட்டி இருக்கிறார். ஆனால் சாதாரணமாக சொன்னால் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

இதனால் நீங்கள் தீக்குளிக்க வேண்டும் என அவருக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். இதில் பாஸ்கரன் பயந்து கொள்ள உடலில் தின்னரை தேய்த்துக் கொண்டு தீ பற்றி நான் எதுவும் ஆகாது. நானும் அதை வீடியோவாக எடுத்து என்னுடைய சேனலில் போட்டுக் கொண்டால் எனக்கும் அதிகமாக வியூஸ் போய் பணம் கிடைக்கும்.  விஷயம் தமிழக முழுவதும் பரவினால் உங்களுக்கும் பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என அவரை நம்ப வைத்திருக்கிறார்.

இதை அடுத்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பாஸ்கரன் தீ வைத்துக் கொள்ள முயல அவரை காவல்துறை சரியான நேரத்தில் தடுத்து விட்டனர். உடனே அவரை விசாரித்த நிலையில் தனக்கு இந்த யோசனையை விக்னேஸ்வரன் தான் கொடுத்தார் என்பதையும் அவரின் சேனல் கதையையும் கூறி இருக்கிறார்.

இதை அடுத்து யூடியூப்பர்  விக்னேஸ்வரன் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சமீப காலமாக கண்டன்ட்டிற்காக தேவையில்லாத விஷயங்களை செய்து பிரச்சனையில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. காவல்துறை நேரத்தை வீணாக்கக்கூடாது எனவும் அதிகாரிகள் அறிவுரை தெரிவித்துள்ளனர்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *