Connect with us

latest news

அடுத்த ரெண்டு நாளுக்கு அடிச்சு பெய்ய போகுதாமே மழை!…சரி எந்த ஊர்கள்ல எல்லாமாம்?…

Published

on

Chennai

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கான வானிலை குறித்து கணித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம், இது குறித்த அறிவிப்பை வெளியிட்டும் உள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல்,  தென்காசி,  திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அநேக இடங்களிலும் இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக் கூடும் என சொல்லப்பட்டிருக்கிறது.

நீலகிரி மற்றும் கோயம்பத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போல திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்ட மலைப்பகுதிகளிலின் ஓரிரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இதே போல தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சொல்லியிருக்கிறது.

RainFall

RainFall

இன்று மற்றும் நாளையைப் போல நாளை மறுநாளான மூன்றாம் தேதியும் பாண்டிச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பொழிவிற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையை பொறுத்த வரை அடுத்த நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டமுடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

google news