india
வயநாட்டிற்கு மீட்புப்பணியினரை தவிர யாரும் வரவேண்டாம்… கோரிக்கை விடுத்த கேரள முதல்வர்…
கேரளா மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து நேற்று அதிகாலை 2 மற்றும் 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 400 குடும்பத்தினை சேர்ந்த 1000 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் பலி எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.
நூற்றுக்கணக்கானோர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. கேரளா மாநிலம் இடையே ஓடும் சாலியார் ஆற்றில் மட்டுமே 19 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. 211 பேரின் நிலைமை இதுவரை என்னவென்பது கூட தெரியாமல் இருக்கிறது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் கொட்டும் மழைக்கு இடையே பராமரிப்பு பணி தீவிரமடைந்து இருக்கிறது. பேரிடர் மீட்புக்குழு, ராணுவ அதிகாரிகள், கடற்படையினர் ஆகியோரும் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன், மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீட்புக்குழுவினருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
200க்கும் அதிகமானோர் மண்ணுக்கு அடியில் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்க பேரிடர் குழு தொடர்ச்சியாக போராடி வருவதால் மீட்புப்பணியினரை தவிர வேறு யாரும் களத்துக்கு வர வேண்டாம் எனக் கோரிக்கையை தமிழக முதல்வர் பினராயி விஜயன் விடுத்து இருக்கிறார். மற்றவர்கள் இங்கும் வரும் போது மீட்புப்பணியில் தடங்கல் ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.