Connect with us

Cricket

இவரு மட்டும் என்ன சும்மாவா?…ரோஹித்துக்கு ரெக்கமன்ட் செய்த ரவி சாஸ்திரி…

Published

on

இந்திய கிரிக்கெட் தான் விளையாடும் எல்லாப் போட்டிகளிலும் வென்றே தீர வேண்டும் என்பது தான் இங்குள்ள ஒவ்வொரு இந்திய ரசிகரின் மனநிலையாக இருந்து வருகிறது. வெற்றி பெறும் போது அந்த வெற்றியை வசப்படுத்திய வீரர்களை தலையில் தூக்கி வைத்து ஆடி கொண்டாடி தீர்த்து விடுவார்கள். ஆனால் வெற்றிக்கு மாறாக தோற்று விட்டால் அப்படியே அந்தர் பல்டி அடித்து வீரர்களை வசைபாடி விடுவார்கள்.

வீரர்களை கொண்டாடி மகிழும் அதே நேரத்தில், இந்திய அணியை வெற்றிப் பாதையில் பயணிக்க வைக்கும் கேப்டன் களை பெருமை படுத்துவதிலும் ரசிகர்கள் தயக்கம் காட்டியது கிடையாது, அதே நேரத்தில் தோற்று விட்டால் நிலைமை தலை கீழ் தான். ஒரு பக்கம் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைவராக இருப்பது மிகப்பெரிய பெருமையாகவே இருந்தாலும் மறு முனையில் சில நேரம் அது உறக்கத்தை கெடுக்கும் பணியாக மாறி விடும்.

MS Dhoni

MS Dhoni

சமீபத்தில் நடந்து முடிந்த ஐம்பது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெறத் தவறியதால் அதிக விமர்சனங்களுக்கு உள்ளானவர் ரோஹித் சர்மா. இவரின் தலைமையில் தான் இந்தியா தொடரில் களம் கண்டது. அதே நேரத்தில் இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று வந்த இந்திய அணியின் தலைவரும் இவரே. இந்த வெற்றிக்குப் பின் இவருக்கு இருந்து வரும் மரியாதையே தனி தான் இப்போது.

ரோஹித் சர்மாவின் தலைமையை பற்றிய தனது கருத்துக்களை சொல்லியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான ரவி சாஸ்திரி. எம்.எஸ். தோனிக்கு நிகராக இந்திய அணியின் தலை சிறந்த கேப்டன் என்ற நற்பெயருடன் வரலாற்றில் இடம் பெறுவார் ரோஹித் சர்மா என புகழாரம் சூட்டியுள்ளார் ரவி சாஸ்திரி.

தோனி, சர்மா இவர்கள் இருவரில் யார் சிறந்தவர்கள் என்று கேட்டால், இருவருமே சமமானவர்கள் என்று தான் கூறுவேன், இதை விட பெரிய பாராட்டு ரோஹித்துக்கு தன்னால் கொடுக்க முடியாது, ஏனென்றால் தோனி என்னவெல்லாம் சாதித்துள்ளார், எத்தனை கோப்பைகளை வென்றுள்ளார் என் நமக்கு தெரியும் என சொல்லியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான ரவி சாஸ்திரி.

google news