Connect with us

tech news

சூப்பர் லுக்.. குறைந்த விலையில் புது இயர்பட்ஸ் அறிமுகம்

Published

on

போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய போக்கோ பட்ஸ் X1 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இயர்பட்ஸ் 40db வரையிலான ANC வசதி, டிரான்ஸ்பேரன்ஸி மோட் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.

இதில் உள்ள 12.4mm டைனமிக் டிரைவர்கள், டைட்டானியம் டையஃபிராம் பயனர்களுக்கு தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதில் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, கூகுள் ஃபாஸ்ட் பேர் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக வழங்கப்படும் செயலியில் கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதை கொண்டு நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் டச் கண்ட்ரோல் உள்ளிட்டவைகளை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

இதுதவிர ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருப்பதால் இயர்பட்ஸ்-ஐ செய்கைகளாலேயே கட்டுப்படுத்தும் வசதி உள்ளது. இது அதிகபட்சம் 60ms வரையிலான லோ லேடன்சி கேமிங் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

புதிய போக்கோ பட்ஸ் மாடலை முழு சார்ஜ் செய்தால் ஒவ்வொரு இயர்பட்-ம் 7 மணி நேர பேக்கப் வழங்கும். சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் இந்த இயர்பட்ஸ்-ஐ அதிகபட்சம் 36 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். இதுதவிர பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 2 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

google news