india
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது…சுப்ரீம் கோர்ட் அதிரடி…
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மறு தேர்வு நடத்த உத்தரவிடக்கோரியும் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சுரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீட் தேர்வில் ஒட்டுமொத்த விதிமுறைகளை மீறும் வகையில் முறகேடு நடைபெறவில்லை. இருபது லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மாணவர்கள் தொடர்ந்த மனுவில் மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட அம்ரவு முன் நடந்தது. நீட் தேர்வு குறித்த மனுவின் மீது விரிவான விளக்கத்தை கொடுத்துள்ளனர் நீதிபதிகள்.
வினாத்தாள் கசிவு தொடர்பாக கூடுதல் வழிகாட்டுதல்களை நிபுணர் குழுவிற்கு நீதிபதிகள் வலியுறுத்தியிருந்தனர்.
வினாத்தாள் தயாரிப்பது முதல் சரிபார்ப்பது வரை கடும் பரிசோதனைகளை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறித்தியதோடு, வினாத்தாள் கையாளுதல், சேமித்தலை சரிபார்க்க வழிகாட்டு நெறிமுறைகளை ஒழுங்கு படுத்த வேண்டும், மையங்களுக்கு வினாத்தாள்களை எடுத்துச் செல்ல நன்கு பூட்டப்பட்ட பாதுகாப்பான வாகனங்களை பயன்படுத்த வேண்டும், வருங்காலங்களில் இது போன்ற தவறுகளை தேசிய தேர்வு முகமை சரி செய்ய வேண்டும்.
கல்வி அமைச்சகம் ஒரு மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தை உருவாக்கி இரண்டு வாரங்களுக்கு பிறகு அந்த முடிவை நீதிமன்றத்தில் தெரியபடுத்த வேண்டும் என தனது வழிகாட்டலில் சொல்லியிருக்கிறது.
தேர்வு சீரமைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழு 2024ம் ஆண்டு செப்டம்பர் முப்பதாம் தேதிக்குள் தனது பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் நீட் தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.