india
Wayanad landslide: உயிர்பிழைச்சு வந்திருக்கோம்… எங்களை விட்ரு… காட்டுயானைகளிடம் தஞ்சம் புகுந்த பெண்…
மனிதாபிமானம் மனிதர்களுக்கு மட்டுமல்ல காட்டு விலங்குகளுக்கும் இருக்கிறது என்பதை வயநாடு சம்பவம் தற்போது நிரூபித்திருக்கிறது. வெள்ளத்தில் இருந்து தப்பித்து காட்டு யானைகளிலும் தஞ்ச புகுந்து தற்போது ஒரு குடும்பம் முகாமில் பாதுகாப்பாக இருக்கும் தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வயநாடு பகுதியில் சூரல்மலா பக்கத்தில் அமைந்திருக்கும் அஞ்சிஷாசிலயிலையில் குடி இருப்பவர் ஜிகீஷ். இவரின் மனைவி சுஜிதா, குழந்தைகள் சூரஜ், மிருதுளா. ஜிகீஷின் தாயார் சுஜாதா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். வயநாட்டு வெள்ளப்பெருக்கில் நள்ளிரவு இவர்கள் வீட்டில் நீர் புகுந்தது.
தன் குடும்பத்தை இதில் இழந்து விடுவோமோ என பயந்த ஜிகீஷ் உடனே அவர்களை வீட்டிலிருந்து வெளியில் அழைத்து வந்திருக்கிறார். கடும் மழை, கொடுமையான இரவில் சுற்றி முற்றி என்ன இருக்கிறது என கூட தெரியாமல் தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோளில் ஜிகீஷ் அவர்களை ஒரு தைரியத்தில் வெளியில் அழைத்து வந்திருக்கிறார்.
வெள்ளத்தில் மிதந்து வந்த மரக்கட்டையால் சுஜாதாவிற்கு கையில் அடிபட்டு இருக்கிறது. சுஜிதாவிற்கு முதுகு தண்டில் அடியும், ஜிகீஷுக்கு விழுந்த மரத்தால் தலையில் அடியும் என குடும்பமே வெள்ளத்தில் சொட்டும் ரத்தத்துடன் காட்டுக்குள் நுழைந்துள்ளனர். ஆனால் அங்கு காட்டு யானைகள் அச்சத்தில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது.
இவர்கள் பயத்தில் அந்த யானைகளை பார்த்து உயிர் பிழைத்து வந்திருக்கிறோம். எங்களை ஒன்றும் செய்து விடாதே என கைக்குப்பி கேட்டதாகவும் அதன் பின் யானைகள் அவர்களுக்கு பாதுகாப்பாக கூடவே இருந்ததாக கூறப்படுகிறது. சில மணி நேரத்திற்கு பின்னர் மீட்பு குழு வந்து அவர்களை தற்போது பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளனர். அதன் பின்னரே யானைகள் அவர்களை விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.