Cricket
யாரும் எதிர்பார்க்கல.. எத்தன twist, BCCI-னா சும்மாவா?
இந்தியாவில் மிகமுக்கிய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று துலீப் கோப்பை போட்டி. இந்திய கிரிக்கெட் அணிக்கு கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளர் ஆனதில் இருந்து, அணியில் ஏற்படும் அதிரடி மாற்றங்களுக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். இதே போக்கு, துலீப் கோப்பை தொடருக்கும் எழுந்தது.
கடந்த வாரம் துவங்கி துலீப் கோப்பையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் குறித்து ஏராளமான தகவல்கள் வெளியாகின. அதில் மிகமுக்கியமான ஒன்றாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் துலீப் கோப்பையில் விளையாடுவார்கள் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இந்திய கேப்டன் மற்றும் அணியில் மூத்த, நட்சத்திர வீரர்கள் இருவரும் துலீப் கோப்பையில் விளையாடுவார்கள் என்ற தகவல் அனைவரையும் “ஏன்?” சொல்ல வைத்தது.
இந்த நிலையில், 2024-25 ஆண்டுக்கான துலீப் கோப்பை தொடரின் முதற்கட்ட போட்டிகளின் அணி விவரங்களை பிசிசிஐ அறிவித்து இருக்கிறது. இந்த தொடர் செபம்டபர் 5 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த முறை துலீப் கோப்பை தொடர் ஆந்திர பிரேதச மாநிலம், அனந்தபூர் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெற இருக்கிறது. துலீப் கோப்பை தொடர் மூலம் இந்திய தேசிய அணிக்கான வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
பிசிசிஐ வெளியிட்ட புதிய அறிவிக்கையின் படி, துலீப் கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகிச் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோர் இடம்பெறவில்லை. இதேபோன்று ரிங்கு சிங்கும் எந்த அணியிலும் இடம்பெறவில்லை.
இந்த முறை நான்கு அணிகள் மோதும் துலீப் கோப்பை தொடரில் சுப்மன் கில், அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம் பின்வருமாறு..
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரர்களில் ரியான் பராக், கேஎல் ராகுல், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், தேவ்தத் படிக்கல், இஷான் கிஷன், அக்சர் பட்டேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் துலீப் கோப்பை தொடரில் விளையாட உள்ளனர். துலீப் கோப்பை தொடரில் வீரர்களின் செயல்பாட்டை பொருத்து அவர்கள் தேசிய அணியில் இடம்பிடிக்க முடியும்.